இரட்டை குழந்தைகளை பெற்ற தமிழ் பிரபலங்கள்.! இதோ முழு லிஸ்ட்

குழந்தைகள் என்றாலே நாம் அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகளை பிடிக்காதவர்கள் என்று யாருமே இல்லை குழந்தைகள் என்று சொல்லும்போதே பல வரம் வாங்கி பெற்றோம் என்று சொல்லுவாங்க. ஏனென்றால் குழந்தைகள் ரொம்ப க்யூட்டாகவும், அவர்களுடைய பாவனைகள் நாம் அனைவருக்கும் பிடிக்கும் குழந்தை பெற்றுக்கொள்வது என்றாலே ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

இந்த நிலையில் தற்போது எந்தெந்த தமிழ் பிரபலங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என்பதை தற்போது காண்போம்.

ராமராஜன் – நடிகர் ராமராஜன் 90களில் மிகவும் பிரபலமான நடிகராக வலம்வந்தார். இவருடைய பாடல்கள் மற்றும் படங்கள் போன்றவை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இவர் ஒரு நடிகர் மட்டுமில்லாமல் ஒரு இயக்குனராகவும் வலம் வருகிறார். இவர் 1987ஆம் ஆண்டில் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு 1978இல் ஒரு ஆணும் ,ஒரு பெண்ணும் என இரட்டை குழந்தை பிறந்தது. அந்த குழந்தைகளுக்கு அருணா,அருண் என்று பெயர் வைத்தார்கள். தற்பொழுது நடிகர் ராமராஜன் மற்றும் நடிகை நளினியும் பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார்கள்.

அர்ஜுனன் – காமெடி நடிகர் அர்ஜுன் காதலில் சொதப்புவது எப்படி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலமாக தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து காதலால் காதல் செய், டார்லிங் 2 உட்பட இன்னும் பல படங்களிலும் காமெடி நடிகராக நடித்துள்ளார். இந்தநிலையில் கடைசியாக இவர் tik.tik.tik என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் காயத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் ஒரு ஆண் ஒரு பெண் என்று இரட்டை குழந்தை பிறந்தது. இவர்களில் ஆண்குழந்தைபெயர் ஈலன் பெண் குழந்தை பெயர் இயர் என்று பெயர் வைத்துள்ளார்கள்.

பரத் – நடிகர் பரத் திருச்சியில் பிறந்தவர். இவர் தமிழில் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து காதல், வெயில், பட்டியல், என் மகன் போன்ற சூப்பரான படங்களில் நடித்து வந்தார். அதன்பிறகு இவர் எதிர்பார்த்த அளவிற்கு திரைப்படங்களில் வெற்றி கிடைக்கவில்லை. கடந்த வருடம் வெளியான காளிதாஸ் படத்தின் மூலம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.

இவர் சின்ன வயதிலிருந்து தோழியான ஜெசி காதலித்து 2013ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். இவருடைய மனைவி துபாயில் ஒரு மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2018ஆம் ஆண்டில் இரட்டை குழந்தை பிறந்தது. இரண்டு குழந்தைகளுமே ஆண் குழந்தை தான். அகத்தியம் மற்றும் ஜாடல் என்று பெயர் வைத்துள்ளார்கள்.

பிரஜித் – நடிகர் பிரஜித் சன் மியூசிக்கில் தனது கேரியரை ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து ஒரு சில சீரியல்களில் நடித்து வந்தார். காதலிக்க நேரமில்லை என்ற சீரியலின் மூலம் பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் நடிகர் பிரதீப். வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் ஆனால் இப்படங்கள் சொல்லுமளவிற்கு இவருக்கு வெற்றியைத் தரவில்லை.

அதன் பிறகு விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சின்னதம்பி சீரியல் மூலம் தன் வெற்றிப் பயணத்தை தொடர்ந்தார். தற்பொழுது அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இவர் சாண்ட்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சாண்ட்ராவும் ஒரு சீரியல் நடிகை தான். தலையணைப் பூக்கள் சீரியலில் வில்லியாக நடித்திருந்தார். பிறகு வெள்ளித்திரையில் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இவர்களுக்கு சென்ற வருடம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. அவர்களுக்கு ருத்ரா மற்றும் மித்ரா என்று பெயர் வைத்துள்ளார்கள்.

தீபக் – சிங்கப்பூர் தீபக் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அது இது எது என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து பல காமெடி ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார். இவர் எட்டு வருடங்களாக காதலித்து பிறகு திருமணம் செய்து கொண்டார். இவர் மனைவியின் பெயர் சுகன்யா. இவர்களுக்கு 2019ஆம் ஆண்டில் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களின் பெயர் சுஜித் மித்ரன் மற்றும் தியா சந்திரமதி என்று பெயர் வைத்துள்ளார்கள்.

சந்தோஷி – நடிகை சந்தோஷி சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் வாழ்க்கை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தமிழ் சினிமாவில் பாபா திரைப்படத்தில் மனிஷா கொரியாவிற்கு தங்கச்சி யாகவும் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களிலும், சீரியலிலும் நடித்து வந்த இவருக்கு இளவரசன் சீரியலில் ஜோடியாக நடித்த ஸ்ரீதரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இருந்த நிலையில் தற்பொழுது 2019ஆம் ஆண்டில் இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது. அவர்களுடைய பெயர் குரு சீதா மற்றும் ரக்ஷிதா.

Leave a Comment

Exit mobile version