தமிழ் சினிமாவில் தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வசூல் வேட்டை நடத்தி வருபவர் தளபதி விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்து ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் முதல்முறையாக கைகோர்த்து பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் சூட்டிங் வெளிநாடு மற்றும் இந்தியாவை சுற்றி எடுக்கப்பட்ட நிலையில் அடுத்ததாக ரஷ்யா செல்ல இருக்கிறது. இந்த படம் விறுவிறுப்பாக எடுத்து அடுத்து வருகின்ற 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு படத்தை வெளியிட படக்குழு முனைப்பு காட்டி வருகிறது.
இதை தொடர்ந்து விஜய் முதன்முதலாக தெலுங்கு இயக்குனர் கட்சியுடன் கூட்டணி அமைத்து. தனது 66வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தில் ராஜூ என்பவர் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் கதை மற்றும் விஜயின் கதாபாத்திரம் குறித்து அனைத்தும் வெளியாகிய நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் நாயகி யார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது .
ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் விஜயுடன் பைரவா, சர்க்கார் ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திலும் அவர் இணைந்தால் மூன்றாவது முறையாக தளபதி விஜயுடன் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்தி இணைய தளப் பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.