தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்று போற்றப்படுபவர் தான் இயக்குனர் சங்கர் இவர் பரத்தை வைத்து காதல் என்ற திரைப்படத்தை தயாரித்து இருந்தார் இத்திரைப்படம் வெளிவந்து நல்ல வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல் நடிகர் பரத்திற்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் கிடைக்க வழி வகுத்தது.
இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் பரத் மற்றும் சந்தியா ஆகியோர்கள் நடித்துள்ளார்கள் இத்திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகள் கூட பரவாயில்லை ஆனால் கிளைமாக்ஸ் காட்சியை யாராலும் மறக்க முடியாது. ஏனெனில் அந்த அளவிற்கு மிகவும் கொடூரமாகவும் ரசிகர்களை கண்கலங்க வைக்கும் அளவிற்கு இருக்கும்.
பொதுவாக சங்கர் திரைப்படம் என்றாலே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கும் அந்த வகையில் இத்திரைப்படமும் அதே போல தான் நல்ல வசூலை வென்றது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்துவிட்டது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் முதலில் கதாநாயகனாக நடிக்க இருந்தது யார் என்று தெரியுமா. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்தது சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தில் நடித்த மணிகண்டன் என்பவர் தான். இவர் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்த 5 நடிகர்களில் இவரும் ஒருவர்.
அதுமட்டுமில்லாமல் அந்த பாய்ஸ் திரைப்படத்தில் நடித்த சித்தார்த், பரத், நகுல் என அனைவருமே தற்போது சினிமாவில் பிரபலங்கள் ஆக மாறி விட்டார்கள் ஆனால் மணிகண்டன் மட்டுமே இன்றும் சரியான வாய்ப்பு இன்றி தடுமாறி கிடக்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி பேசும்போது காதல் திரைபடத்தில் ஹீரோவாக தான் நடிக்க இருந்தேன் அப்பொழுது எனக்கு சினிமா பற்றி சரியான அனுபவம் இல்லாததன் காரணமாக காதல் திரைப்படத்தை புறக்கணித்து விட்டேன் ஆனால் இன்று அதற்காக வருத்தப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.