திரை உலகில் பாகுபலி என்ற திரைப்படத்தை இயக்கி உலக அளவில் பிரபலமானவர் தான் இயக்குனர் ராஜமவுலி அந்த வகையில் இவர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்து அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கும் திரைப்படங்களும் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்து வருகிறது.
அந்த வகையில் தற்போது இவர் ஆர்ஆர் ஆர் என்ற திரைப்படத்தை இயக்கிவருகிறார் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ராம்சரன் மற்றும் ஜூனியர் என்டிஆர் போன்றோர்கள் நடித்துள்ளார்கள். இதில் ராம்சரண் ஏற்கனவே ராஜமௌலியுடன் பணியாற்றியுள்ளார்.
அந்தவகையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை தூண்டிவிட்டது மட்டுமில்லாமல் மிகவும் வைரலாக பரவி வந்தது. அந்தவகையில் இந்த திரைப்படத்தை ஜனவரி மாதம் வெளியிட உள்ளதன் காரணமாக இந்த திரைப்படத்தின் புரமோஷன் வேலையை மிக தீவிரமாக செய்து வருகிறார்கள்.
அந்தவகையில் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆலியா பட் நான் தென்னிந்திய திரைப்படங்களில் நடிப்பதற்கு மிக ஆர்வமாக இருப்பதாக கூறி உள்ளார் அதுமட்டுமில்லாமல் தமிழில் எனக்கு திரைப்படம் நடிக்க மிகவும் ஆர்வம் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு ஹீரோக்களும் தன்னுடைய திரைப்படங்களில் நடிகை ஆலியா பாட்டை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதுமட்டுமில்லாமல் தூதுவிட்டு வருகிறாராம்.
ஆனால் நமது நடிகையோ மேடையில் பேசியது மேடையே போய்விட்டது என்பது போல தான் உண்டு தன் வேலை உண்டு என எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் இருந்து வருகிறாராம்.