தற்போது சினிமா நடிகைகளைப் போல சின்னத்திரை நடிகைகளின் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள் அந்த வகையில் இவர்கள் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் மிக வைரலாக பரவி அது மட்டுமில்லாமல் லைக்கும் கமெண்டும் குவிந்து கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி என்ற சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்த ஒரு நடிகை என்றால் அது ஆலியா மானசா தான். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார்.
இவர் சீரியலில் நடிப்பது மட்டுமின்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி வீடியோக்கள் வெளியிடுவது புகைப்படம் வெளியிடுவது என தினசரி ஏதேனும் ஒரு பதிவினை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளர்.
அந்த வகையில் இவர் வெளியிடும் பதிவுகளுக்கு அவருடைய ரசிகர்கள் கமெண்ட் களையும் லைக்குகளையும் கொடுத்து வருவது மட்டுமில்லாமல் இதன் மூலமாக அவருடைய பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அந்தவகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 5.1 பில்லியன் பார்வையாளர்களை ஆலியா மானசா தாண்டி உள்ளதாக சமூக வலைதள பக்கத்தில் செய்திகள் வெளியாகி உள்ளது. இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல சீரியல் நடிகர் சஞ்சீவ் வின் மனைவி என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.