நடுராத்திரியில் சிம்பு வீட்டின் முன் கண்ணீருடன் பிரபல சீரியல் நடிகை.! வெளியான தகவலால் பெரும் பரபரப்பு.!

simbu
simbu

சமீப காலமாக சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரையில் இருக்கும் நடிகைகளுக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்துள்ளது இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர்களில் ஸ்ரீநிதியும் ஒருவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த 7c சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து யாரடி நீ மோகினி புது புது அர்த்தங்கள் என பல சீரியல்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் சமீபகாலமாக ஸ்ரீநிதி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அப்படித்தான் சமீபத்தில் வெளியாகிய வலிமை திரைப்படத்தை பார்த்த ஸ்ரீநிதி இந்த திரைப்படத்தை பார்க்க பொறுமை வேண்டும் அந்த பொறுமை எனக்கு கிடையாது படம் ரொம்ப கொடுமையா இருந்துச்சு என மிகவும் கடுமையாக விமர்சித்தார்.

இதை பார்த்த அஜித் ரசிகர்கள் அவரை கடுமையாக வசை பாடினார்கள் அதுமட்டுமில்லாமல் பல வகையில் அவரை மிரட்டலும் செய்தார்கள் அஜித் ரசிகர்களிடம் படாதபாடு பட்ட ஸ்ரீநிதி தற்போது அடுத்ததாக சிம்புவை தன்னுடைய டார்கெட்டாக வைத்துள்ளார். இந்தநிலையில் ஸ்ரீநிதி கடந்த சில தினங்களுக்கு முன்பு சிம்புவைப் பற்றி ஒரு மீம்ஸ் ஒன்றை கிரியேட் செய்து பதிவிட்டிருந்தார்.

ஒருநாள் எல்லோருக்கும் திருமணம் ஆகியிருக்கும் நானும் சிம்புவும் மட்டும்தான் சிங்கிளாக இருப்போம் என அதில் குறிப்பிட்டிருந்தார் இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஒருவர் நீங்கள் இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமே என ஐடியா கொடுத்தார் இதுவும் நல்லாதான் இருக்கு என பதில் கொடுத்த ஸ்ரீநிதி. சிம்புவின் வீட்டின் முன்பு நின்று கொண்டு தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என போராட்டம் நடத்தி வருகிறார் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இது குறித்து சில புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கம் ஆன இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அதில் ஸ்ரீநிதி  கூறியதாவது சிம்பு இத்தனை வருடங்களாக எனக்காக சிங்கிள் ஆகவே இருக்கிறார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை இன்னைக்குதான் எனக்கு புரிந்தது சிம்பு. எல்லோரும் எங்களை சேர்த்து வையுங்கள் ப்ளீஸ் லேட்டா தான் புரிஞ்சது ஆனால் புரிஞ்சிடுச்சு சிம்புவை தவிர நான் வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தான் போராட்டம் பண்ணனுமா லவ்க்குலாம்   போராட்டம் இல்லையா என பதிவிட்டுள்ளார்.

simbu
simbu

மேலும் ஒரு பதிவில் 4 சதவீதம் மட்டும்தான் சார்ஜ் உள்ளது ப்ளீஸ் வாங்க பஸ்ட் சிம்பு வேணும் நெக்ஸ்ட் தண்ணி வேணும் கோவமா இருக்காரு அவரு மட்டும் புரிஞ்சுக்கணும் நம்மால புரிஞ்சிக்க மாட்டாரா ப்ளீஸ் வாங்க வந்து சேர்த்து வையுங்கள் நான் இப்பவே பார்க்கணும் என குறிப்பிட்டுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர் ஒருவர் நெஜமாவே சிம்புவை காதலிக்கிறாரா இல்லை பப்ளிசிட்டிக்காக இதுபோல் செய்கிறாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.

simbu
simbu