விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிகளையும் மக்கள் அதிக ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள் அதிலும் குறிப்பாக விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பலவிதமான சாதனைகளை படைத்து வருகிறது.
விஜய் டிவியில் கூடிய சீக்கிரம் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் 5 வது சீசனில் மக்கள்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகிறார்கள் இந்த ஐந்தாவது சீசன் ஒரு புதுவிதமான விளையாட்டாக இருக்கும் எனவும் இந்த நிகழ்ச்சியையும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கிறார் எனவும் தகவல் கிடைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து இதில் புதுப்புது பிரபலங்கள் கலந்து கொள்வதால் மக்கள் மிக ஆர்வமாக இந்த நிகழ்ச்சியை எதிர்பார்த்து வருகிறார்கள் பொதுவாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் விஜய் டிவியின் டிஆர்பி எகிறி விடும் என்றுதான் கூறவேண்டும் மேலும் இந்த நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்கள் மற்றும் சீரியல் பிரபலங்கள் கலந்து கொள்வதாக நாள்தோறும் ஒரு புது புது தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.
அதேபோல் தற்பொழுதும் இந்த நிகழ்ச்சியில் ஒரு சீரியல் பிரபலம் கலந்துகொள்வதாக தகவல் கிடைத்துள்ளது ஆம் யார் அந்த சீரியல் பிரபலம் என்று கேட்டால் வேறு யாருமில்லை சின்னத்தம்பி சீரியலில் நடித்து மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகை பவானி ரெட்டி பிக் பாஸ் 5 வது சீசனில் கலந்துகொள்வதாக தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறி பலரும் இது உண்மையா என கேட்டு வருகிறார்கள்.