வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் கமலஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இப்படி வெள்ளித்திரையில் டாப் நடிகராக இருக்கும் கமலஹாசன்.
சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவை தொடர்ந்து ஐந்தாவது சீசன் வரை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசன் ஆரம்பித்து ஒரு மாதங்களுக்கு மேலாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் விறுவிறுப்பாக விளையாண்டு வருகின்றன.
இதில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டு தற்பொழுது 5 போட்டியாளர்கள் வெளியேறினர். மீதம் 14 போட்டியாளர்கள் வீட்டில் இருக்கிறார்கள். இந்த போட்டியாளர்களில் ஒருவரான ராஜ் ஜெயமோகன் முதலில் கனா காணும் சீரியலில் நடிக்கத் தொடங்கி பின்பு சரவணன் மீனாட்சி, ஆண்டாள் அழகர், பாரதிகண்ணம்மா, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பல சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தவர்.
மேலும் வெள்ளித்திரையில் இவரது நண்பன் கவின் ஹீரோவாக நடித்த நட்புனா என்னனு தெரியுமா திரை படத்தில் இரண்டாவது நாயகனாக அறிமுகமானார். இதற்கு முன் இவர் நடிகரும் இயக்குனருமான கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். ராஜு ஜெயமோகன் கடந்த ஆண்டு தாரிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .
இவர்கள் திருமணம் முடிந்து தற்போது ஒரு வருடங்கள் ஆகிவிட்டன தற்போது இவர்களின் முதல் திருமண நாளை ஒன்றாக அவர்களால் கொண்டாட முடியவில்லை. அதனை அடுத்த பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ராஜீ ஜெயமோகனுக்கு தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் திருமண வாழ்த்து தெரிவித்துள்ளார் மேலும் கப்பு முக்கியம் பிகிலு என்றும் பதிவிட்டுள்ளார்.