Vijay : தளபதி விஜய் லோகேஷ் உடன் கைகோர்த்து நடித்துயுள்ள திரைப்படம் லியோ. வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக மக்கள் மற்றும் ரசிகர்களை குஷிப்படுத்த லியோ டீம் அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிட்டு வந்தது.
அந்த வரிசையில் இசை வெளியீட்டு விழாவை செப்டம்பர் 30ஆம் தேதி அதாவது இன்று நடத்த திட்டமிட்டு இருந்தது ஆனால் சில காரணங்களால் அது இரத்தானது இதற்கு பலரும் அரசியல் அழுத்தங்கள் இருக்கலாம் என பேச்சுக்கள் எழுந்து வரும் நிலையில் லியோ இசை வெளியீட்டு விழா நின்று போனதற்கு நாங்கள் கொடுத்த நெருக்கடி தான் காரணம் என சினிமா பிரபல தயாரிப்பாளர் ஏ எம் சௌத்ரி கூறி இருக்கிறார்.
அவர் சொன்னது என்னவென்றால்.. அதாவது விஜய் மாணவர்களுக்கான ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசும் போது அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களை மட்டும் குறிப்பிட்டு பேசியிருந்தார் என்றும் பசும்பொன் முத்துராமலிங்க தலைவரைப் பற்றி ஏன் பேசவில்லை என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர் இதைப் பற்றி ஏற்கனவே சமூக வலைதளத்தில் நான் கண்டனம் தெரிவித்ததாகவும் ஒருவேளை ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசுவார் என்றும் எதிர்பார்த்து இருந்தோம் அது மட்டுமல்லாமல் விஜய் மக்கள் இயக்க மன்றத்தில் இருக்கும் தலைமை நிர்வாகிகளிடம் கூட இதைப் பற்றி பேசினாராம் ஒருவேளை ஆடியோ வெளியீடு விழாவிலும் பசும்பொன் தேவரை பற்றி விஜய் பேசவில்லை..
என்றால் பெரிய நெருக்கடியை கொடுப்போம் என்று சௌத்ரி கூறி இருந்தாராம் இந்த தகவல் கண்டிப்பாக புஸ்ஸி ஆனந்த் வரைக்கும் சென்றதால் தான் இசை வெளியீட்டு விழா இரத்தானது என கூறினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஒரு தேசிய தலைவர் எம்ஜிஆர் முதல் ஸ்டாலின் வரை முத்துராமலிங்க தேவருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
விஜய் மட்டும் ஏன் அம்பேத்கரை வைத்து அரசியல் பண்ண வேண்டும் என நினைக்கிறாரா கேட்டிருக்கிறார் மேலும் அவரை வளர்த்து விட்ட விஜயகாந்த் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லாத இவர் சாதி தலைவரான திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வது ஏன் என கேள்வி எழுப்பினார் ஒரு வேலையை இசை வெளியீட்டு விழா நடந்து முத்துராமலிங்க தேவர் பெயரை மட்டும் விஜய் குறிப்பிடாமல் போயிருந்தால்..
அவர் நேர்கொள்ளும் விளைவுகளே வேறு மாதிரியாக இருந்திருக்கும் என கூறினார் அதாவது முத்துராமலிங்க தேவர் சமூகத்தில் இருக்கும் அனைவரும் அவர் படத்தை புறக்கணித்திருப்போம் என்று கூறியிருக்கிறார் லியோ படம் கண்டிப்பா அடிவாங்கும் என்றும் இனிமேல் விஜய்க்கு அடிமேல் அடிதான் என்றும் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார் சௌத்ரி.