பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் சினிமாவில் உள்ள நடிகர்களை வெளுத்து வாங்கிய சம்பவங்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்கிறோம். பொதுவாக நடிகர்கள் தயாரிப்பாளர்களை கண்டு கொள்ளவில்லை என்ற செய்தியை பலமுறை கே ராஜன் அவர்கள் பொதுக்கூட்டத்தில் தெரிவித்து வருகிறார்.
இருப்பினும் அவர்கள் எதையும் கேட்காத வண்ணம் இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது படப்பிடிப்பு தளத்திற்கு வந்தால் கேரவனில் அரை மணி நேரம் வீணாக்குகிறார்கள் அதற்கு தயாரிப்பாளர்கள் கிட்டத்தட்ட லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டும் இதெல்லாம் நடிகர்களுக்கு தெரிவதில்லை.
அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் எல்லாம் தீவிரவாதி போல ஐந்து ஆறு பாதுகாவலர்களுடன் சுற்றி திரிவது, அதற்குப் பிறகு நடிகைகள் பின்னால் சுற்றுவது இது போன்ற விஷயங்களில் ஈடுபடுவதை விட படத்தில் எந்த அளவிற்கு ஆர்வம் காட்டி சீக்கிரமாக நடித்து முடித்து கொடுத்தால் தான் அந்தந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கு அதிக நஷ்டத்தில் இருந்து சிறிதளவு குறைக்கலாம் எனவும் தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் கூறியிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் பிரபல நடிகை ஒருவர் மும்பையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வரும்போது அவருடன் மும்பையில் இருந்து ஏர்போர்ட் வரை ஏழு பாதுகாவலர்கள் அதன் பிறகு ஏர்போர்ட்டில் இருந்து படப்பிடிப்பு தளத்திற்கு வரும் வரைக்கும் அதற்கு வேறு ஒரு பாதுகாவலர்கள். இதெல்லாம் யாருடைய செலவு எல்லாம் தயாரிப்பாளர்கள் தலையில் இரக்கிறீர்கள் என்றெல்லாம் சாரமாரியாக நடிகர் நடிகைகள் யாரையும் பாரபட்ச பாக்காமல் இது போன்ற கேள்விகளை எழுப்பி உள்ளார்.
மேலும் தயாரிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து உள்ளார் அதாவது நல்ல கதையை தேர்ந்தெடுத்து சினிமாவில் புதுமுக நடிகராக இருந்தாலும் பரவாயில்லை கதையை மட்டும் நன்றாக தேர்ந்தெடுத்து அதில் எந்த அளவிற்கு முதலீடு போட முடியுமா அந்த அளவிற்கு முதலீடு போட்டு லாபத்தை பெற்றுக் கொள்ளுங்கள் எனவும் கூறி இருக்கிறார்.