பரமேஸ்வரி என்கின்ற பைரவி பல சீரியல்களில் துணை நடிகையாக நடித்து வந்தவர் இவர் திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கின்ற நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார் அதன்பிறகு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது நான் சினிமாவில் தான் இருக்கிறேன் என சொல்லி பைரவிக்கு நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
வேலூரை சேர்ந்த ராஜா தேசிங்கு என்கின்ற சுப்பிரமணியம் இவர் நடிகை பைரவியை தயாரிப்பாளராக மாற்றுகிறேன் எனக்கூறி ஆசை வார்த்தையை கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் துணை இயக்குனர் நீ தான் எனவும் உன்னை நடிக்க வைக்கிறேன் எனவும் பலவிதமான ஆசைகளை தூண்டி உள்ளார். அதை அப்படியே நம்பி விட்டார் சீரியல் நடிகை பைரவி.
ராஜா தேசிங்கு கூறிய அனைத்தையும் நம்பி தன்னையே அவருக்கு கொடுத்து விட்டார். அதன்பிறகு படப்பிடிப்பிற்காக பூஜை செய்ய வேண்டும் என ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். வேலூரில் உள்ள ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார் அங்கு சாமி கும்பிடும் பொழுது கண்ணை மூடிக்கொண்டு இருக்கும் பைரவியின் கழுத்தில் வலுக்கட்டாயமாக தாலி கட்டியுள்ளார் ராஜா தேசிங்கு.
கொஞ்சம் கூட விருப்பமில்லாமல் அந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டார் அதன் பிறகு வழுக்கட்டாயமாக ராஜா தேசிங்கு பைரவியை பாலியல் ரீதியாக துன்புறுத்த செய்ய ஆரம்பித்தார். மேலும் இதை சக சீரியல் நடிகைகளிடம் கூறி கூறி அழுதுள்ளார். என்ன செய்வது என் தலையெழுத்து என தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டார்.
மேலும் ஒரு காலகட்டத்தில் படப்பிடிப்பு தயாரிப்பில் சில சிக்கல்கள் கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது நீங்கள் அதைச் சரி பண்ணுங்க எனக் கூறினார் படத்தின் இணை தயாரிப்பாளர் நீங்கதானே என கூறினார்.அதையும் பைரவி நம்பி தன்னுடைய நகை இருந்த பணம் எல்லாத்தையும் சேர்த்து ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அதன்பிறகு படத்திற்கு ஆபீஸ் போட்டிருக்கேன் ஓர் இடத்திற்கு கூட்டிட்டு போறேன் என கூட்டிட்டு போனார் டிஸ்கஸ் பண்ணனும் என்று சொன்னார்.
ஜாகுவார் சார் ஆபிஸ் எல்லாம் போனோம் இதற்கிடையில் அவருடைய நடத்தை கொஞ்சம் வித்தியாசமாக இருந்ததால் நான் கொஞ்சம் உஷாராக இருந்தேன் ஆனாலும் தன்னை ஒரு பக்திமான் போல் காட்டிக் கொண்டு தன்னை ஏமாற்றி விட்டார் அவரை நம்பி நான் ஏமாந்து விட்டேன். அதுமட்டுமில்லாமல் தாலி கட்டிய மனைவிக்கு மாமா வேலை பார்த்துள்ளார் ராஜா தேசிங் அதாவது பைரவியை தன்னுடைய நண்பர்களுக்கு விருந்தாக்க முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து சென்னை கமிஷனர் ஆபீஸில் பைரவி புகார் ஒன்றை கொடுத்தார் ஆனால் அவர்கள் அதை ஏற்று விசாரிப்பது போல் தெரியவில்லை அதனால் சென்னையில் தலைமை காவல்துறை அதிகாரி அலுவலகத்திற்கு முன்பு தீக்குளிக்க முயன்றனர் அதன் பிறகு அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் காவல்துறையினர்.
ராஜா தேசிங் சுப்பிரமணியத்தை விரைவில் காவல்துறையினர் கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.