“வாரிசு” படத்திற்காக குரல் கொடுக்கும் பிரபல அரசியல்வாதி.. விஜய் படம் ரிலீஸ் ஆகலைன்னா உங்க படம் ஒன்னும் ஓடாது.!

vijay
vijay

பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு இந்தப் படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி எடுத்து வருகிறார். தில் ராஜூ மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. படம் பொங்கலை முன்னிட்டு இரண்டு மொழிகளிலும் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஆனால் ஆந்திராவில் மஹரசங்கராந்தி  விடுமுறை என்பதால் இது போன்ற விழாக்களில் தெலுங்கு படங்களுக்கு மட்டும் தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனக் கூறியது. வாரிசு படத்தை தெலுங்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் உருவாக்கி இருந்தாலும் நேரடியாக தமிழ் படம் என்பதால் ரிலீஸ் செய்யக்கூடாது என தெலுங்கு சினிமா இன்ட்ரஸ்ட்ரியல்  கிடுக்கு பிடி போட்டது.

இதனால் தெலுங்கில் வாரிசு திரைப்படம் சில நாட்கள் கழித்துதான் ரிலீஸ் ஆகும் என ஒரு தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவரும், சினிமா நடிகரும், இயக்குனருமான சீமான் விஜய்க்கு ஆதரவாக பேசி உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால்..

இதுவரை தமிழ்நாட்டில் தெலுங்கு, மலையாளம் போன்ற படங்கள் திரையிடுவதில் எந்த சிக்கலும் ஏற்பட்டதில்லை ஆனால் தமிழ் படத்திற்கு தெலுங்கில் பாரபட்சம் காட்டுவது தேவையில்லாத ஒன்று என கூறியிருந்தார் கலைக்கு மொழி பாடு இல்லை என்ற ஒரே நோக்கத்தில் மற்ற மொழி படங்களை ஆதரித்து பெரும் வாய்ப்பு வழங்கி வருகிறோம்.

KGF, RRR, பாகுபலி போன்ற படங்கள் தமிழ்நாட்டு திரையரங்கு உரிமங்களில் எந்த பாகுபாடும் காட்டியதில்லை நடிகர் சங்கம் கூட தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரிலேயே தாங்கி நிற்கிறது விஜய் போன்ற முன்னணி நடிகரின் படத்திற்கு இவ்வளவு சிக்கல் என்றால் மற்ற நடிகர்களின் நிலைமை எப்படி இருக்கும் என்றும், மேலும் இது விஜய்க்கு என்ற ஒரு தனி நடிகருக்கு நடக்கும் பிரச்சனை அல்ல ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கே இழைக்கப்படும் அநீதி என்றும்,

இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சீமான் கூறினார் மேலும் பேசிய அவர் தன்னுடைய அறிக்கையில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இந்த முடிவை உடனே திரும்பி பெற வேண்டும் என்றும் விஜயின் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆவதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அதன் பின்னர் தெலுங்கு திரைப்படங்களை தமிழ்நாட்டில் வெளியிட ஒரு பொழுதும் அனுமதிக்க மாட்டோம் என வன்மையாக எச்சரித்துள்ளார்.