Actress sirdevi: தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என ஏராளமான மொழி திரைப்படங்களில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீதேவி. நடிகை ஸ்ரீதேவி துணைவன் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் இதனை தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார்.
இவர் 1996ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி சனிக்கிழமை அன்று துபாயில் மாரடைப்பு காரணமாக காலமானார். இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் மிகவும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. பாலிவுட்டில் முதல் பெண் சூப்பர் ஸ்டார், பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்ற பெருமையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் அரசியல் விமர்சகர் கந்தராஜ் ஸ்ரீதேவி குறித்து ஏராளமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாக கூறியிருந்தார்கள். இது ஒரு பொய்யான தகவல் என்றும் ஸ்ரீதேவி போனி கபூர்க்கு இடையே நடந்த திருமணத்திற்கு பணம் தான் காரணம் எனவும் அவருடைய மரணத்திற்கு காரணம் பணம்தான் எனவும் கூறி பகீர் கிளப்பிவுள்ளார்.
மேலும் இது குறித்து ஸ்ரீதேவி பெயரில் ரூபாய் 200 கோடி ரூபா இன்சூரன்ஸ் இருந்ததாகவும் இதனால் தான் ஸ்ரீதேவி கொல்லப்பட்டார் எனவும் கூறி இருக்கிறார். இதனை அடுத்து போனி கபூர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் அதனால் தான் இந்த பிரச்சனையில் இருந்து தப்பித்து விட்டதாக பிரபல அரசியல் விமர்சகர் கந்தராஜ் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஸ்ரீதேவி 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் நிலையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து சினிமாவில் நடித்து வெற்றியினை கண்டார். தற்பொழுது இவர் இல்லை என்றாலும் இவருடைய நினைவுகள் அனைவர் மத்தியில் இருந்து வருகிறது.