டான் திரைப்படத்தை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிய பிரபல அரசியல் கட்சித் தலைவர்..! இவர் ப்ளானே புரியலையே..!

don-1
don-1

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தாலும் தற்போது முன்னணி நடிகர்களுக்கு வளர்ந்த நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான் இவர் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணிபுரிந்த தொகுப்பாளர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

ஆனால் தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படமானது மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் சுமார் 100 கோடிக்கும் மேலாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றி விழாவில் லண்டனிலிருந்து லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் கலந்து கொண்டது மட்டுமில்லாமல் இந்த விழா மிக சிறப்பாக நடைபெற்று பலரையும் கவர்ந்துள்ளது இந்நிலையில் தான் திரைப்படத்தை பல்வேறு பிரபலங்கள் மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட சிவகார்த்திகேயனை பாராட்டியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் டான் திரைப்படத்தை பாராட்டி உள்ளார் அந்த வகையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு என்னவென்றால் நான் சமீபத்தில்தான் டான் திரைப்படத்தை பார்த்தேன் அந்த வகையில் இந்த திரைப்படத்தில் பெற்றோரை அவர்கள் இருக்கும் பொழுதே கொண்டாடுங்கள் என்று இந்த திரைப்படத்தின் மூலம் கூறியது சிறப்பாக அமைந்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தை அனைவரும் பார்க்கவேண்டிய படம் என்று கூறியது மட்டுமில்லாமல் டாக்டர் ராமதாஸ் அவர்கள் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுவரை வெளிவந்த இந்த பதிவினை ரசிகர்கள் மட்டுமின்றி அவர்களுடைய தொண்டர்களும் மிக பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார்கள்.