மாரடைப்பு காரணமாக உயிரிழந்த பிரபல பின்னணி பாடகர் கேகே.! சோகத்தில் ரசிகர்கள்.

kk

தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற பழமொழிகளில் அழகான குரலால் பாடி பலரது மனதையும் கொள்ளை கொண்டுள்ளார் பாடகர் கே கே. இவர் பிரபுதேவா நடிப்பில் வெளியான  மின்சார கனவு என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஸ்ட்ராபெரி கண்ணே என்ற பாடலை பாடி மிகவும் பிரபலம் அடைந்தார்.

அதன் பின்னர் சூர்யாவின் காக்க காக்க என்ற திரைப்படத்தில் உயிரின் உயிரே என்ற பாடலையும் பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்நியன் படத்தில் இடம் பெற்று மிகவும் பிரபலமான அண்டங்காக்கா கொண்டக்காரி என்ற பாடல் செய்யும் இவர்தான் பாடியுள்ளார்.

இது போன்ற பல தமிழ் திரைப்படங்களில் பின்னணி பாடகராக பல பாடல்களைப் பாடியுள்ளார். அதிலும்  விஜய் நடிப்பில் வெளியான கில்லி, சிம்புவின் மன்மதன், மற்றும் 7ஜி ரெயின்போ காலனி, போன்ற பல திரைப்படங்களில் பின்னணி பாடகராக பாடியுள்ளார்.

இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள மிகவும் பிரபலமான ஒரு கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அங்கு அவர் மேடையில் பாடி கொண்டிருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் அங்கு உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கேகே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

k k
k k

53 வயதான ஓகே ஓகே அவர்கள் உயிரிழந்தது ரசிகர்களுக்கும் இசை உலகிற்கும் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.