பட வாய்ப்பிற்காக ஆண்களையும் படுக்கைக்கு அழைக்கும் பிரபலங்கள்.! உண்மையை போட்டு உடைத்த பிரபலம்.!

payilvan ranganathan
payilvan ranganathan

சினிமாவில் புதிதாக நுழைய வேண்டுமென்றால் பல சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு பல இடைஞ்சல்களும் வந்து தான் சேரும். இதனை பல நடிகைகள் மற்றும் பிரபலங்கள் கூறி நாம் கேட்டுள்ளோம். சினிமாவில் பொதுவாக ஜெயித்த நடிகர் நடிகைகளின் கதையை கேட்டு பழகிக்கொண்ட நாம் தோற்றவர்களின் கதையை இதுவரை யாரும் கேட்டுக் தெரிந்து கொள்வதில்லை.

அந்த வகையில் சினிமாவில் அறிமுகமாகி பெரிய நடிகராக வேண்டும் என அனைத்தையும் இழந்து ஏமாந்த பல நடிகர் மற்றும் நடிகைகள் இருக்கிறார்கள். அப்படி ஏமாந்தவர்கள் பணத்தையோ பொருளையோ ஏமாந்து இருந்தால் திரும்பி சம்பாதித்துக் கொள்ளலாம் ஆனால் அவர்கள் இழந்தது மானத்தை.

பொதுவாக புதுமுக நடிகைகளிடம் படத்தில் வாய்ப்பு வேண்டும் என்றால் நாங்கள் சொல்வதை செய்ய வேண்டும் அட்ஸ்மன்ட் செய்து கொள்ள வேண்டும் என கண்டிஷன் போடுகிறார்கள் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அதுமட்டுமில்லாமல் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டால் தான் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் என்று பல நடிகைகளின் வாழ்க்கையை நாசம் செய்துள்ளார்கள் பல பிரபலங்கள்.

இதற்கிடையில் வெளிவந்த உண்மை தான் metoo விவகாரம் இந்த தகவல் வெளியாகி சினிமா உலகையே ஆட்டிப் படைத்தது அதுமட்டுமில்லாமல் அடுத்தடுத்து புகார்கள் இதன் மூலம் வெளியானது பல ஹீரோயின்கள் இது போல் எங்களுக்கும் நடந்துள்ளது என கூறியுள்ளார். சினிமாத்துறையில் பாலியல் தொல்லை இருக்கிறது என வெளிப்படையாக கூறி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார்கள்.

இங்கு இப்படி இருக்கையில் இது பெண்களுக்கு மட்டும் தான் நடக்கிறதா என்று கூறினால் இல்லை ஆண்களுக்கும் அதிகமான அளவில் இது போன்று பாலியல் தொந்தரவு நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இது பெரிதாக வெளியே வருவதில்லை. பல புதுமுகங்கள் சினிமாவில் நடித்து பெரிய நடிகராக வரவேண்டும் என பல இளைஞர்கள் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் இடம் போகிறார்கள்.

ஆனால் அவர்கள் உங்களுக்கு சான்ஸ் வேண்டுமென்றால் பணம் வேண்டும் என முட்டுக்கட்டை போடுகிறார்கள் அப்படி பணம் இல்லை என்றால் சினிமா துறையில் நீங்கள் எதுவும் சாதிக்க முடியாது எனக் கூறி அவர்களின் முழு நம்பிக்கையும் உடைத்து விடுகிறார்கள். அதன்பிறகு ஒருபடி மேலே சென்று அப்படியும் சான்ஸ் வேண்டும் என்றால் நீங்கள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால் உங்களுக்கு தேவையானதை நாங்கள் தருகிறோம் என கூறி அவர்களை தவறான வழிக்கு கொண்டு செல்கிறார்கள்.

ஒரு சில இளைஞர்கள் சான்ஸ் கிடைத்தால் போதும் என பெரிய ஹீரோவாக வளர்ந்து விடலாம் என என்னி அவர்கள் கேட்கும் அட்ஜஸ்ட்மெண்ட்களுக்கு ஒப்புக் கொள்கிறார்கள் அதன் பிறகு எல்லாம் முடிந்த பிறகு நடிகைகளை எப்படி கழட்டி விடுகிறார்களோ அதேபோல் பல இளைஞர்களையும் நடிக்க வைக்காமல் கழட்டி விடுகிறார்கள். இதுபோல் வெறி பிடித்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் பல இளைஞர்கள் சிக்கி சின்னாபின்னமாக மாறுகிறார்கள்.

இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாக கூறியுள்ளார்.