தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் வசூல் மன்னனாகவும் முன்னணி நட்சத்திரமாகவும் வலம் வருகிறார். அதேபோல் கடந்த சில வருடங்களாகவே அஜித்தின் திரைப்படம் வசூலில் மிகப்பெரிய வசூலை செய்து வருகிறது. இந்த நிலையில் கடைசியாக போனி கபூர் தயாரிப்பில் ஹச் வினோத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வலிமை. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வந்தது.
அதுமட்டுமில்லாமல் அஜித்தின் வலிமை திரைப்படம் உலக அளவில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் அதனை கொண்டாடி மகிழ்ந்தார்கள் மேலும் அஜித் நடிப்பதை தாண்டி பல விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
மேலும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோ இணையதளம் ஓடிடி ரிலீசை பெற்றது. மேலும் ஓடிடி இணையதளத்தில் வலிமை திரைப்படத்தை பலரும் கண்டு மகிழ்ந்தார்கள். பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியானளே பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு கலெக்சன் என்பதுதான் பலரும் பார்த்து வருவார்கள். அந்த வகையில் வலிமை திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் எவ்வளவு என்பதை தயாரிப்பாளர் போனி கபூரே அவருடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
அதேபோல் வலிமை திரைப்படத்தில் பலர் ரசித்த காட்சி என்றால் ஸ்டண்ட் காட்சிதான் இந்த காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் இந்த திரைப்படத்தில் ஸ்டாண்ட் காட்சிகளுக்கு அஜித்திற்கு டூப் போட்ட நபர் யார் என்ற விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.
விஷால் என்ற நபர்தான் அஜித்திற்கு ஸ்டன்ட் காட்சிகளில் டூப் போட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் வலிமை திரைப்படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் பலவற்றையும் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மேலும் ரசிகர்களின் கேள்விக்கு தான் பதில் கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.