மற்ற நடிகைகளை விட ஒரு படி மேலே சென்று உலகின் எட்டு நகரங்களுக்குச் சென்று அரபிக்குத்துப் பாடலுக்கு நடனமாடிய பிரபல நடிகை.! வைரலாகும் வீடியோ.

arabikkuthu
arabikkuthu

பிரபல மலையாள நடிகை ஒருவர் உலகில் எட்டு நகரங்களுக்குச் சென்று அரபி குத்துப்பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்தில் நெல்சன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அரபி குத்து பாடல் காதலர் தினத்தில் வெளியிடப் பட்டது இந்த பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.

இந்தநிலையில் இந்த பாடலுக்கு சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்கள் என பலரும் நடனமாடிய வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள் அந்த வகையில் யாஷிகா ஆனந்த், சமந்தா, பூஜா ஹெக்டே, மணிமேகலை என பல நடிகைகளும் நடனமாடி வீடியோவை வெளியிட்டு உள்ளார்கள்.

அந்த வகையில் பிரபல மலையாள நடிகையான லிண்டுரோனி என்பவர் அரபி குத்து பாடலுக்கு உலகின் 8 நகரங்களில் நடனமாடிய வீடியோவை பதிவிட்டுள்ளார் அதாவது இத்தாலியில் சாவோனா, ரோம்,  மார்ஷெல்லி,  பிரான்ஸ் நாட்டின் பார்சிலேனோ, ஸ்விட்சர்லாந்தின் மிலன், பலே ரோமா ஆகிய 8 நகரங்களில் நடனமாடிய வீடியோவை தற்போது பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடம் மிக வேகமாக வைரலாகி வருகிறது.