தமிழ்சினிமாவில் பல்வேறு நடிகர்கள் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்கள் அந்த வகையில் நடிகைகளும் இரட்டை வேடத்தில் நடித்து வெற்றி கண்டுள்ளார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த நடிகைகள் இரட்டை வேடத்தில் நடித்துள்ள திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம்.
நடிகை சினேகா பழனியப்பன் தயாரிப்பில் வெளிவந்த பார்த்திபன் கனவு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஸ்ரீகாந்த் நடித்த திரைப்படத்தில் நடிகை சினேகா ஜனனி என்ற கதாபாத்திரத்தில் மாடர்ன் பெண்ணாகவும் சத்யா என்ற கதாபாத்திரத்தில் குடும்ப பெண்ணாகவும் நடித்திருந்தார்.இவ்வாறு வெளிவந்த இத்திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்று அவருக்கு பாராட்டுகளை வாங்கிக் கொடுத்தது.
நடிகை சிம்ரன் அவர்கள் கௌதமன் இயக்கத்தில் வெளியான கனவே கலையாதே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் முரளி சிம்ரன் டெல்லி கணேஷ் கோவை சரளா போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்த இந்த திரைப்படத்தில் அவர்கள் அமிர்தம் மற்றும் சாரதா என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி இருப்பார்.
நடிகை ஜோதிகா தன்னுடைய கணவருடன் இணைந்து பேரழகன் என்ற திரைப்படத்தில் நடித்து இருப்பார் இந்த திரைப்படத்தில் கண்தெரியாத கதாபாத்திரம் ஒன்றிலும் மற்றொரு கதாபாத்திரமான பிரியா என்ற கதாபாத்திரத்திலும் ஜோதிகா நடித்த திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டது.
நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளியான திரைப்படங்களில் மாபெரும் வெற்றி கண்ட திரைப்படம் என்றால் அருந்ததி திரைப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது. இவ்வாறு இந்த திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா ஜக்கம்மா என்ற கதாபாத்திரத்திலும் அருந்ததி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி இருப்பார்.
நடிகை சமந்தா 10 எண்றதுக்குள்ள என்ற திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விக்ரம் அவர்கள் நடித்த இத்திரைப்படம் ஆனது மாபெரும் வெற்றி கண்டது.
நடிகை பிரியாமணி அவர்கள் சாருலதா என்ற திரைப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் சாருலதா என்ற கதாபாத்திரத்தில் மென்மையான பெண்ணாகவும் லதா என்ற கதாபாத்திரத்தில் முன்கோபம் உடைய பெண்ணாகவும் நடித்துள்ளார்.
இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான தசாவதாரம் என்ற திரைப்படத்தில் நடிகை அசின் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஆனால் இதே திரைப்படத்தில் நடிகர் கமல் அவர்கள் பத்து வேடங்களில் நடித்து பெருமை சேர்த்துள்ளார். இதில் அசின் நடித்த கதாபாத்திரம் என்னவென்றால் கோதை மற்றும் ஆண்டாள் ஆகிய இரண்டு கதாபாத்திரம் ஆகும்.