நடிகர் சிம்பு அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் எஸ்டிஆர் 48 படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் கதாநாயகி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிகப்பெரிய வெற்றினை பெற்றார்.
இந்த படத்தின் மூலம் இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் அந்த வகையில் கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 48 உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. மாநாடு படத்தின் வெற்றியினை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்திருந்தார் மேலும் இந்த படத்தினை கௌதம் மேனன் இயக்கியிருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.
இப்படிப்பட்ட நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாகும் என பட குழுவினர்கள் அறிவித்துள்ளனர். இவ்வாறு வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிறகு பத்து தல படத்தில் நடித்துவரும் சிம்பு கன்னடத்தில் வெளியான முப்தி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வரும் நிலையில் சிம்பு கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த தாதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் பத்து தல படத்தினை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்க ஏ.ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார் இந்நிலையில் சிம்புவின் 48வது படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அண்மையில் வெளியாகி உள்ளது. அதாவது துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தான் சிம்புவின் 48வது படத்தினை இயக்க உள்ளார்.
மேலும் கமலஹாசன் அவர்களின் தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் நிறுவனம் எஸ்டிஆர் 48 படத்தினை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது மேலும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, திஷா பவதானி, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் இவர்கள் ஒருவரில் சிம்புவுக்கு ஜோடியாக எஸ்டிஆர் 48 படத்தில் நடிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.