சந்திரமுகி 2 படத்தில் ஜோதியாக இடத்தை தட்டி தூக்கிய பிரபல முன்னணி நடிகை.! இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு…

chandramukhi-2
chandramukhi-2

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம் தான் சந்திரமுகி  இந்தத் திரைப்படம் கிட்டத்தட்ட 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி ஒரு சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் பிரபு, நாசர், வடிவேலு, மாளவிகா, வினித், ஜோதிகா, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஒரு ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள சந்திரமுகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் பல சாதனைகளை படைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து  தற்போது பி வாசு அவர்கள் சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கி வருகிறார்.

ஆனால் இந்த படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் அவர்கள் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் நடன ஆசிரியராகவும் நடிகராகவும் திகழ்ந்துவரும் நடிகர் ராகவா லாரன்ஸ் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

இதனை தொடர்ந்து தற்போது பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ராகவா லாரன்ஸ் தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் மகிமா நம்பியார், லட்சுமிமேனன், வடிவேலு, உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதனை தொடர்ந்து மேலும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை இணைந்துள்ளதாக லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரணவத் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதாவது சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிகை ஜோதிகாவுக்கு பதிலாக கங்கனா ரணவத் அவருடைய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. சந்திரமுகி திரைப்படத்தில் நடிகை ஜோதிகாவின் கதாபாத்திரம் ரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அது மட்டுமல்லாமல் இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிகை ஜோதிகாவின் முகபாவனை கச்சிதமாக பொருந்தி இருப்பார்.

நடிகை கங்கனா ரணவத்தையும் சும்மா சொல்லக்கூடாது பாலிவுட்டில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் கங்கனா ரணவத் தற்போது ஜோதிகா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தாலும் ஜோதிகாவின் இடத்தை பூர்த்தி செய்வாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.