தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் தெலுங்கு நடிகராக இருந்தாலும் இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் தமிழிலும் இவருக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் நடிப்பில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தற்பொழுது ‘லைகர்’என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சர்வதேச புகழ்பெற்ற குத்து சண்டை வீரரான மைக் டைசனும் இந்த படத்தில் இடம் பெற்றிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்தநிலையில் தற்பொழுது லைகர் படத்தில் இடம்பெற்றுள்ள அக்டி பக்டி என்ற பாடலை பட குழுவினர்கள் வெளியிட்டுள்ளார்கள்.இத்திரைப்படத்தில் விஜய் தேவர் கொண்டானுக்கு ஜோடியாக நடிகை அனன்யா பாண்டே நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் அக்டி பக்டி பாடல் வீடியோ தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகிவுள்ளது.
இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள் மேலும் தற்பொழுது சோசியல் மீடியாவில் இந்த பாடல் தான் மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. மேலும் இந்த பாடலுக்கு லைக்களையும் கமாண்டுகளையும் அள்ளிக்குவித்து வருகிறார்கள்.