விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட பிரபல முன்னணி நடிகர்.! இப்ப புலம்பி என்ன பயன்..

vijay
vijay

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் விஜய் இவர் நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்கள் வெற்றிவாகை சூடியுள்ளது. மேலும் தற்பொழுது தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கு முன் வெளியாகிய  மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இந்த நிலையில் கோலமாவு கோகிலா டாக்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் என்பவர் தான் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. விஜய் திரைப்படம் என்றாலே ரசிகர்களுக்கு விருந்து என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் அதிலும் சன் பிக்சர் இந்த திரைப்படத்தைத் தயாரிக்கிறது என்பது இன்னும் கூடுதல் தான்.

ஏனென்றால் சன் பிக்சர் நிறுவனம் விளம்பரம் செய்வதில் மிகவும் கைதேர்ந்தவர்கள் அதனை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை இந்தநிலையில் விஜய் மற்றும் ஷங்கர் கூட்டணியில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் நண்பன் இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள்.

நண்பன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது மேலும் ஜீவா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகை இருந்தது ஆர்யா தான். ஜீவா கதாபாத்திரத்தில் முதலில் ஆர்யாவை தான் ஷங்கர் நடிக்க வைப்பதற்கு அணுகினார் ஆனால் அப்பொழுது நடிகர் ஆர்யா அவர்கள் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது.

ஆர்யா மட்டுமல்லாமல் இன்னும் சில முன்னணி நடிகர்களை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க ஷங்கர் முடிவெடுத்தார் ஆனால் கடைசியில் ஜீவா தான் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். ஒரு சில நடிகர்கள் முன்னணி நடிகர் நடிக்கும் திரைப்படத்தில் நாம் இரண்டாம் கட்ட நடிகரா என ஒதுங்கிக் கொண்டார்களாம். இந்த நிலையில் இந்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.