மூன்றாவது முறையாக விஷால் கூட்டணியில் பிரபல முன்னணி நடிகர்..! வயசு 64 ஆனாலும் கொஞ்சம் கூட அழகு குறையலையே..!

vishaal-1

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால் ஆனால் இவர் சமீபத்தில் நடிக்கும் திரைப்படங்கள் எதுவுமே சொல்லும்படி வெற்றியை கொடுக்கவில்லை அந்த வகையில்  இவருக்கு கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்கள் இருந்து வருகிறது.

இந்நிலையில் பிரபல நடிகர் ஆர்யா உடன் இணைந்து விஷால் அவர்கள் எனிமி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு  முடிவடைந்த நிலையில் தற்போது அக்டோபர் 14ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்கு வெளியாக உள்ளதாக செய்திகள்  வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஷால் வீரமே வாகை சூடும் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் இத்திரைப்படமும் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நமது நடிகர் தன்னுடைய 32வது திரைப்படத்தில் நடிக்க  முன் வந்துள்ளாராம்.

இவ்வாறு உருவாகும் இத்திரைப்படத்தை ராணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது மேலும் இத்திரைப்படத்தில்  நடிகர் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்க உள்ளார். மேலும் இத் திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்க உள்ளாராம்.

மேலும் இத்திரைப்படத்தில் பிரபல முன்னணி நடிகர் இளைய திலகம் பிரபு அவர்களும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை நடிகர் விஷால் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே விஷால் பிரபுவுடன் இணைந்து தாமிரபரணி ஆம்பள போன்ற பல திரைப்படங்களில் நடித்து மாபெரும் வெற்றி கண்டவர் இந்நிலையில் மூன்றாவது முறையாக பிரபுவுடன் நடிக்க போவதை பார்க்க ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருந்து வருகிறார்கள்.

prabhu-1
prabhu-1