அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஒய்வு பெற்றார் “பிரபல இந்திய வீரர்”..! யார் தெரியுமா.? சோகத்தில் ரசிகர்கள்.

robin
robin

ஐபிஎல் சீசன் ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு விதமான ஐபிஎல் அணிகளில் விளையாடியும், இந்தியாவுக்காக விளையாடியும் பிரபலம் அடைந்தவர் ராபின் உத்தப்பா. இந்தியாவுக்காக ஆரம்பத்தில் தொடக்க ஆட்டக்காரராகவும், நடுவரச் செய்திலும் இறங்கி ரன்கள் மழை பொழிந்தவர்.

சிறப்பாக விளையாடினாலும் ஒரு கட்டத்திற்கு மேல் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை இருப்பினும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து கே கே ஆர் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன்கள் அடித்த வீரராக ஒரு கட்டத்தில் திகழ்ந்தார் சிறப்பாக விளையாடிய இவருக்கு கம்பீர் கேப்டன் பொறுப்பை இழந்த பிறகு கே கே ஆர் அணியில் ராபின் உத்தப்பா நிலைத்து நிற்கவில்லை.

அவரும் கே கே ஆர் அணியில் இருந்து கழட்டிவிட பின் இராஜஸ்தான் ராயல் அணிக்கு போனார் அங்கு இவருக்கு கடைசி இரண்டு மூன்று போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது ஒரு வழியாக சென்னை அணி அடுத்தடுத்த சீசன் களில் தட்டி தூக்கி அவரை தக்க வைத்துக் கொண்டு அவருக்கு தொடக்க ஆட்டக்காரராக விளையாட வாய்ப்பு கொடுத்தது அவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணிக்காக அசத்தினார்.

இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார் அதாவது நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என கூறி முடிவெடுத்துள்ளார் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால் நான் தொழில் முறை கிரிக்கெட் விளையாடத் தொடங்கி 20 ஆண்டுகளாகிறது எனது நாட்டையும் எனது மாநில கிரிக்கெட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் இருப்பினும் அனைத்து நல்ல விஷயங்களும் முடிவுக்கு வரவேண்டும் மேலும் நன்றியுள்ள இதயத்துடன் இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவிலும் ஓய்வு பெற முடிவெடுத்துள்ளேன்.

என் வாழ்க்கையில் ஒரு பயணத்தை தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன் எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் ஆதரவு மற்றும் ஊக்கமளித்த பிசிசி யின் தலைவர், செயலாளர் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் சிறப்பான நினைவுகளை கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு ராபின் நன்றி அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.