என்னதான் பல நடிகர்களும் பலவகையான திரைப்படங்களை மக்களுக்கு கொடுத்தாலும் மக்கள் அதிகம் விரும்பி பார்ப்பது என்னவோ சீரியல்கள் தான் அந்த வகையில் சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள்,நடிகைகள் பலரும் மக்கள் மத்தியில் மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி விடுகிறார்கள் அதற்கு காரணம் அவர்கள் சீரியலில் நடிக்கும் நடிப்பு மக்களை கவர்ந்து விடுகிறது.
அந்த வகையில் காதலிக்க நேரமில்லை என்ற சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் தலை காட்ட ஆரம்பித்த நடிகைதான் சந்திரா லட்சுமணன் என்பவர் இவர் தமிழ் சினிமாவில் ஸ்ரீகாந்த் நடித்த மனசெல்லாம் என்ற திரைப்படத்தின் மூலம்தான் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து மலையாள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
மேலும் திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் இல்லை என்ற காரணத்தினால் மீண்டும் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க வந்து விட்டார் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த துளசி என்ற சீரியலில் துளசி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
அதன் பின்பு தமிழில் துளசி,பாசமலர்,கோலங்கள்,காதலிக்க நேரமில்லை என 18 வருடங்களாக கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் மேலும் பல வருடங்களாக சீரியல்களில் நடித்து வந்து அவ்வபோது வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து கொண்டே இருந்தது ஆனால் இவர் நல்ல கதாபாத்திரம் வரட்டும் என்று அனைத்து திரைப்படங்களையும் தட்டிக் கழித்து விட்டார்.
மேலும் இவருக்கு திருமணம் ஆகவில்லை என்ற கவலை மக்களுக்கு இருந்தாலும் தற்போது இவருக்கு திருமணம் முடிந்துவிட்டது ஆம் கிட்டத்தட்ட 38 வயதில் இவர் திருமணம் செய்து கொண்டதை பார்த்து மக்கள் இவரை பாராட்டி வருகிறார்கள் நீங்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கப் போகிறீர்கள் என்று நாங்கள் நினைத்தோம் ஆனால் உங்களது திருமண புகைப்படம் வெளிவந்து விட்டதால் நாங்கள் தற்போது சந்தோஷத்தில் இருக்கிறோம் என்று கூறிவருகிறார்கள்.