தோல்வியை துளிகூட சந்திக்காத பிரபல இயக்குனர்கள்..! இதுல ஒருத்தர் படம் எப்போதுமே தேசிய விருது தான்..!

director
director

தமிழ் சினிமாவில் பல்வேறு இயக்குனர்கள் தன்னுடைய சிறந்த திறனை வெளிக்காட்டி ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி கொண்டே இருக்கிறார்கள் அந்த வகையில் தனக்கென ஒரு ஸ்டைல் மற்றும் புது பாணியில் திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை பெருமளவு கவர்ந்து வரும் இயக்குனர்கள் ஏராளமாக உள்ளார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குநர்கள்தான் லோகேஷ் கனகராஜ், அட்லீ மற்றும் வெற்றிமாறன். அந்தவகையில் மாநகரம் என்ற பிரம்மாண்டமான திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ் இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து கைது மாஸ்டர் தற்போது கமலஹாசனை வைத்து விக்ரம்  என நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

அந்தவகையில் இவர் இயக்கிய நான் அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது மட்டுமில்லாமல் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்தது. அதுமட்டுமில்லாமல் தற்போது வெளிவந்த விக்ரம் திரைப்படமானது மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது மட்டுமில்லாமல் வசூலில் கோடி கோடியாக குவித்து வருவதாக தெரியவந்துள்ளது.

இயக்குனர் அட்லி இவர ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து மெர்சல், பிகில் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார் இவ்வாறு இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குனராக உருவாக்கிவிட்டார்.

அதன்பிறகு சொல்லப்போனால் வெற்றிமாறன் தான் இவர் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் போன்ற வித்தியாசமான கதை களம் கொண்ட திரைப்படங்களை இயக்கிய ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இவர் இயக்கத்தில் இதுவரை 5 திரைப்படங்கள் வெளிவந்த நிலையில் அந்த அனைத்து திரைப்படங்களும் தேசிய அளவில் விருது பெற்ற திரைப்படங்களாக அமைந்தது.

அதுமட்டுமில்லாமல் வெற்றிமாறன் திரைப்படத்தில் நடிப்பதற்கு பல்வேறு முன்னணி நடிகர்களும் வரிசைகட்டி நிற்பது வழக்கம் தான் அந்த வகையில் தற்போது சூர்யா வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு இந்த திரைப்படம் மிக விரைவில் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.