தனுஷ், நயன்தாராவை பார்த்து பயந்த பிரபல இயக்குனர் – சரியான நேரத்தில் செல்வராகவன் கொடுத்த ஆதரவு..

nayanthara
nayanthara

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் தனுஷ் இவர் சினிமா ஆரம்பத்தில் பல வெற்றிகளை குவிக்க முக்கியமான மாறாக இருந்தவர் செல்வராகவன் மற்றொருவர் எஸ் பி மித்ரன் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்பி மித்ரன் தனுஷ் உடன் கைக்கோர்த்து உத்தமபுத்திரன், யாரடி நீ மோகினி, குட்டி, கடைசியாக திருச்சிற்றம்பலம் படத்தையும் எஸ்பி மித்ரன் தான் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முதலில் உதவி இயக்குனராக செல்வராகவனிடம் பணிபுரிந்தார். பின் எஸ்பி மித்ரன் முதலில்  தனுஷை வைத்து யாரடி நீ மோகினி என்னும் படத்தை எடுத்தார்.

இந்த படம் ஒரு ரீமேக் படம் தெலுங்கில்  செல்வராகன் எடுத்த படத்தை தான் தமிழில் யாரடி நீ மோகினி என்ற பெயரில் எஸ்.பி மித்ரன் தமிழ்  எடுத்தாராம் அப்பொழுது நடந்த சில சம்பவங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்  எஸ்பி மித்திரன் அது குறித்து விலாவாரியாக தற்போது நாம் பார்ப்போம்..

தனது முதல் திரைப்படமான யாரடி நீ மோகினி திரைப்படத்திலேயே நயந்தாரா, தனுஷ், ரகுவரன் போன்ற டாப் நடிகர் நடித்ததால் எனக்கு பயமாக இருந்தது. தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்வது ரொம்ப கஷ்டம் ஏனென்றால் அங்கு வேறு மாதிரி நடித்திருக்கிறார்கள் இங்கு வேறு மாதிரி நடிப்பதால் படம்  ஒரு புரிதல் இல்லாமல் இருந்தது.

இரண்டு நாட்கள் படபிடிப்பை  நிறுத்தி விடலாமா எனக்கு யோசித்து கொண்டு இருந்தாராம் இந்த நிலையில் தான் படத்தொகுப்பாளரான கோகுலா பாஸ்கர் செல்வராகவனை அழைத்து பிஎஸ் மித்திரன் இது போன்ற ஒரு படத்தை எடுக்கிறார் ஆனால் குழப்பத்தில் இருக்கிறார் என கூற உடனே செல்வராகவன் இதுவரை எடுத்த காட்சிகளை பார்த்துவிட்டு நன்றாக வந்திருக்கிறது நன்றாக எடுக்கச் சொல்லி நான் கூறி இயக்குனர் மித்ரனுக்கு தைரியம் மூட்டினாராம் பின் படம் சூப்பராக எடுக்கப்பட்டதாம்..