நடிப்பிற்கு பெயர்போன சியான் விக்ரம் அண்மைகாலமாக சொல்லிக்கொள்ளும்படி வெற்றிப் படங்களை கொடுக்கவில்லை என்றாலும் தொடர்ந்து சிறந்த இயக்குனரிடம் கதையை கேட்டு நடித்து வருகிறார். விக்ரம் கடைசியாக தனது மகன் துருவ் விக்ரம் உடன் கை கோர்த்தது மஹான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் OTT தளத்தில் வெளியாகி நல்லதொரு வெற்றியை பதிவு செய்தது இருப்பினும் விக்ரமின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானால் அதற்கான லெவலே வேற அந்த வகையில் நடிகர் விக்ரம் நாவல் மற்றும் வித்தியாசமான கதைகளை இயக்கி வெற்றி கொண்டு வரும் மணிரத்னத்துடன் கைகோர்த்து பொன்னியின் செல்வன்.
திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதுபோல ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள கோப்ரா படத்தில் விக்ரம் நடித்து அசத்தியுள்ளார் இந்த இரண்டு படங்களும் வெளிவர ரெடியாக இருக்கின்றன. அந்தந்த படக்குழுவும் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளது இது இப்படியிருக்க அடுத்ததாக விக்ரம் யாருடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தை எடுத்து அசத்திய பா. ரஞ்சித் தான்.
விக்ரமின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் அந்த படம் ஒரு மேஜிகல் ஸ்கிரிப்ட்டை கொண்டு உருவாக்கி உள்ளேன் நிச்சயம் அது சிறப்பாக இருக்கும் என அன்மையில் பா ரஞ்சித் கூறியிருந்தார் நிச்சயம் விக்ரம் இன்னொரு முக்கிய படமாக இருக்கும் என ரசிகர்களும் கணக்கு போட்டு உள்ளனர்.விக்ரமும் பா. ரஞ்சித்தும் இணைவது உறுதி என ஏற்கனவே தகவல்கள் எல்லாம் வெளி வந்தாலும்..
இவர்கள் இருவரும் இணைந்து இன்னும் படத்தின் ஷூட்டிங்கை தொடங்காமல் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. காரணம் நடிகர் விக்ரம் தற்போது தனது குடும்பத்துடன் லண்டன் சென்றுள்ளார் அங்கு சிறிது ஓய்வு எடுத்து விட்டு பிறகு வந்து பா. ரஞ்சித்துடன் உடன் இணைந்து அந்த படத்திற்கான வேலை ஜூலை மாதம் முதலிலேயே ஆரம்பிக்கப்பட இருக்கிறதாம்.