வாங்குற காசுக்கு நடிச்சு கொடுத்துட்டு போ தேவையில்லாம பண்ணாத.. சிம்புவை மறைமுகமாக மிரட்டிய பிரபல இயக்குனர்..!

simbu
simbu

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஒரு கட்டத்தில் ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்தவர் நடிகர் சிம்பு. ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து வெற்றி மேல் வெற்றியை குவித்தார் இருப்பினும் சில பிரச்சனை காரணமாக சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் போனதால் இவரது கேரியர் முடிஞ்சது என பலரும் கூறினார்.

ஆனால் சிம்பு சைலண்டாக உடல் எடையை குறைத்து மீண்டும் கம் பேக் கொடுத்தார். தற்பொழுது நல்ல நல்ல படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அதனால் அவரது மார்க்கெட்டும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் சிம்பு பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.

நமக்கு எல்லோருக்கும் தெரியும் சிம்பு சரியாக படபிடிப்பு தளத்திற்கு செல்ல மாட்டார் என பல தகவல்களை நாம் அறிந்திருக்கிறோம். அப்படி ஒரு தடவை ஒரு சம்பவமும் அரங்கேறி உள்ளது . ஹரி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான திரைப்படம் கோவில் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருந்தார் இந்த படம் அப்பொழுது வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது முதல் மூன்று நாள் சூட்டிங்க்கும் சிம்பு தாமதமாக வந்திருக்கிறார் ஒரு தடவை கடுப்பான ஹரி உதவி இயக்குனரை சத்தம் போட்டு அழைத்து இருக்கிறார். படபிடிப்பு செட்டில் இருக்கும் போது அனைவருக்கும் கேட்கும் படி உனக்கு சம்பளம்.

தருகிறேனா.. இல்லையா.. இன்னைக்கு 9 மணிக்கு ஷூட்டிங்க்கு வர சொன்னா 11 மணிக்கு வந்திருக்க ஒழுங்கா இரு இல்லனா தொலைச்சிடுவேன் உன் வேலையை யார் பார்ப்பார்கள் என கோபமாக கத்தி உள்ளார். இதனை பார்த்துக் கொண்டிருந்த சிம்பு இயக்குனர் நம்மை தான் இப்படி திட்டுகிறார் என உணர்ந்து கொண்டார் அதன் பிறகு சிம்பு சரியான நேரத்திற்கு படப்பிடிப்பு தளத்திற்கு வந்து படத்தை முடித்துக் கொடுத்தார் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.