கீர்த்தி சுரேஷை வைத்து தனுஷை மட்டம் தட்டிய பிரபல இயக்குனர்..! கைக்கு வந்தது வாய்க்கு எட்டாது போல..!

dhanush-002
dhanush-002

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ் இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் சாணி காகிதம் இந்த திரைப்படம் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளிவந்த அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவன் அவர்கள் நடித்துள்ளார்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது கிரைம் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும் மேலும் இதற்கு முன்பே இந்த இயக்குனர் ராகி என்ற திரைப்படத்தை வசந்த் ரவியை வைத்து இயக்கியுள்ளார். அந்த வகையில் சாணி காகிதம் திரைப்படம் ஆனது நமது இயக்குனருக்கு இரண்டாவது திரைப்படம் ஆகும்.

இந்நிலையில் இவருடைய திரைப்படத்திற்கு என்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெறுவது மட்டுமில்லாமல் நல்ல பாராட்டுக்களையும் பெற்று வந்தார். இந்நிலையில் நமது இயக்குனர் அருண் மாதேஷ்  தனுஷை வைத்து ஒரு திரைப்படம் எடுக்கப் போவதாக அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தின் கதையானது முதல் இரண்டு திரைப்படங்களையும் காட்டிலும் வேறுபட்டதாக இருக்கும் என தெரிய வந்தது மட்டுமில்லாமல் வரலாற்றில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்றை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக உள்ளதாம்.

மேலும் இந்த திரைப்படத்திற்கான கதையை தனுஷிடம் இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே அவர் கூறிவிட்டாராம் இந்த கதையும் தனுஷுக்கு மிகவும் பிடித்துள்ளது என கூறியது மட்டுமில்லாமல் மிக விரைவில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிப்போம் என நமது இயக்குனர் தெரிவித்துள்ளார்.

keerthi-2
keerthi-2

இந்நிலையில் தொகுப்பாளர் ஒருவர் முதன் முதலாக பெரிய ஸ்டாருடன் ஒரு திரைப்படத்தை எடுக்க போகிறீர்கள் இதை நினைத்து உங்கள் மனநிலை எப்படி என்று கேட்டுள்ளார். அதற்கு நமது இயக்குனரோ கீர்த்தி சுரேஷ் பெரிய ஸ்டார் தான் அவர் கூடவே படம் பண்ணிட்டேன் அதேபோல பாரதிராஜா சார் கூடவும் படம் பண்ணிட்டேன் ஆகையால் தனுஷ்லாம் ஒரு பெரிய விஷயம் கிடையாது என பதில் கூறி உள்ளார்.

dhanush-001
dhanush-001