AK 62 படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க இருக்கும் பிரபல இயக்குனர்.? விக்னேஷ் சிவன் மாஸ்டர் பிளான்..!

ajith
ajith

நடிகர் அஜித் சினிமாவில் மிக பிஸியாக இருந்து வரும் நடிகர். இவர் சினிமாவை தவிர்த்து பைக் ரேஸ் துப்பாக்கி சுடுதல் குடும்பம் என தனக்கு பிடித்த பலவற்றிலும் கவனம் செலுத்தி வருகிறார்  அதனாலயே அஜித் மிக பிஸியாகவே இருந்து வருகிறார். இருந்தாலும் அவரது ரசிகர்களுக்காக அஜித் தொடர்ந்து வருடத்திற்கு ஒரு படமாவது கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் கடைசியாக வலிமை திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து ஹெச் வினோத்துடன் மூன்றாவது முறையாக கைகோர்த்து தற்போது பெயர் வைக்கப்படாத தனது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரமாண்ட பொருட்செலவில் போனி கபூர் தயாரிக்க படப்பிடிப்பு  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சுவாரியர், வீரா, சமுத்திரகனி, அஜய், ஜான் கொக்கேன் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றன. இந்த படத்திற்காக அஜித் உடல் எடையை அதிரடியாக குறைத்தும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்து வெளியாகும் தருவாயில் அஜித் அவரது அடுத்த படத்தில் இணைவார் என தெரிய வருகிறது.

ஆம் அஜித்தின் அடுத்த 62வது திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் ஏற்கனவே வெளியாகிய நிலையில் தற்போது அந்த படத்திற்கான வேலையை விக்னேஷ் சிவன் பார்த்து வருகிறார். AK 62 படத்தில் அஜித்துக்கு ஹீரோயினாக முதலில் நயன்தாரா நடிக்க இருக்கிறார் என பேச்சுகள் வெளிவந்தன.

ஆனால் தற்போது ஐஸ்வர்யா ராய் தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது. இவர்களைத் தொடர்ந்து இயக்குனர் கௌதம் மேனன் AK 62 படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார். மேலும் இவர் இந்த படத்தில் ஒரு மெயின் வில்லன் கேரக்டரில் நடிப்பார் என கூறப்படுகிறது இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.