தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் கார்த்திக் இவர் தற்பொழுது முத்தையா இயக்கத்தில் விருமன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் இயக்குனர் சங்கரின் இளைய மகள் அதிதி சங்கர் அவர்கள் தான் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
இந்த பிரம்மாண்ட திரைப்படத்தினை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது இந்நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படத்திற்கு இயக்குனர் ஜிவி பிரகாஷ் அவர்கள் தான் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் சர்தார் திரைப்படத்தினை தீபாவளியில் வெளியிடலாம் என படக்குழுவினர்கள் திட்டமிட்ட இந்நிலையில் நடிகர் கார்த்திக் தன்னுடைய அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அதாவது இந்த திரைப்படத்தினை விக்ரம்பிரபு நடிப்பில் வெளியான தினகரன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர்தான் இயக்கவுள்ளார்.
இந்த இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அந்த வகையில் விசாரணை,, வடசென்னை ,அசுரன், விடுதலை போன்ற படங்களில் வெற்றிமாறனுடன் இவர் பணிபுரிந்தவர் மேலும் ஜெய்பீம் திரைப்படத்தில் இவர்தான் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஆவர்.
மேலும் இந்த திரைப்படத்தினை 40 கோடி பட்ஜெட்டில் உருவாக்க இருப்பதாகவும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க சென்டிமெண்ட் கலந்த திரைப்படமாக அமையும் எனவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப் போவதாகவும் படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் தற்பொழுது கார்த்திக் தன்னுடைய திரைப்படங்களின் கதைகளில் மிக அதிக அளவு அக்கரை காட்டி வருவதாகவும் தெரியவந்துள்ளது.