வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க போகும் பிரபல இயக்குனர் – சிவகார்த்திகேயனை ஒரு வழி பண்ண போகிறார்.? யார் தெரியுமா..

sivakarthikeyan
sivakarthikeyan

தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ஒவ்வொரு திரைப்படங்களும் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து வசூலை வாரி குவித்து வருகின்றனர். அஜித் விஜய்க்கு நிகராக சிவகார்த்திகேயன் மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அந்தவகையில் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் காமெடி கலந்த ஆக்ஷன் படமாக அமைந்ததால் ரசிகர்கள் பலரும் என்ஜாய் செய்து அமோகமாக இந்த படத்தை கொண்டாடி வந்தனர். மேலும் சிவகார்த்திகேயன் கேரியரில் முதல்முறையாக டாக்டர் படம் 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளி சாதனை படைத்து பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்தது.

இதனை தொடர்ந்து கடந்த மாதம் மே 13ஆம் தேதியன்று சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் வெளிவந்த டான் திரைப்படமும் காமெடி, ஆக்ஷன், காதல், கல்லூரி கலாட்டா போன்ற அனைத்தும் கலந்த கலவையான படமாக அமைந்ததால் இந்த படத்தை ரசிகர்கள் என்ஜாய் செய்து பார்த்து வருகின்றனர்.

இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே வருகின்றன. தற்போது வரை டான் படம் உலக அளவில் 116 கோடிக்கு மேல் வசூலை அள்ளி போய்க்கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையில் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க உள்ள தனது SK21 படத்தை மடோன் அஸ்வின் இயக்க உள்ளார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரே அத்வானி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியதை அடுத்து தற்போது இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் SK 21 படத்தில் வில்லனாக நடிக்க அதிகம் ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது