ஒரே ஒரு இரவு சில்க் ஸ்மிதாவுடன் இருந்துவிட்டு அடுத்த நாள் தன்னுடைய மனைவியை பார்க்கவே கூச்சமாக இருந்ததாக கூறிய இயக்குனர்.! கண்ணீருடன் உண்மையை உடைத்த மனைவி…

silk smitha
silk smitha

தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி கண்ணியாகவும் கனவு கன்னியாகவும் வளம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா இவர் 80 90 காலகட்டத்தில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர். ஆஹா ஓஹோ என பேரையும் புகழையும் பெற்று வந்த சில்க்ஸ்மிதா 1996 ஆம் ஆண்டு மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டது பெரும் பேச்சு பொருளாக மாறியது.

அதுமட்டுமில்லாமல் சில்க் ஸ்மிதா நடித்து வந்த காலகட்டத்தில் பல நட்சத்திரங்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் தன்னுடைய கணவர் ஒரு இரவு சில்க் ஸ்மிதா வீட்டில் இருந்ததை குறித்து  ஒளிப்பதிவாளர் வேலு பிரபாகரனின் மனைவியும் பத்துக்கு மேற்பட்ட படத்தினை இயக்கிய இயக்குனருமான பி ஜெயா தேவி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அவர் அதில் கூறியதாவது தன்னுடைய கணவர் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்ததாக கூறியுள்ளார் ஜெயா தேவி. தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்ட வேலு பிரபாகரன் சில்க் ஸ்மிதா நடித்த பிக் பாக்கெட் என்ற திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் அப்பொழுது சில்க் ஸ்மிதா அவர்களுடன் நெருக்கமாக பழக்கம் ஏற்பட்டது அந்தப் பழக்கம் ஒரு முறை சில்க் ஸ்மிதா வீட்டிற்கு சென்று அவரிடம் பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை என கூறும் அளவிற்கு உயர்ந்தது.

நள்ளிரவு ஆன பிறகு ஒளிப்பதிவாளர் வேலு பிரபாகரன் சாப்பிட ஏதாவது இருக்கிறதா என்று சில்க் ஸ்மிதாவிடம் கேட்டு உப்புமாவும் சாப்பிட்டு இருக்கிறாராம் சினிமாவே தன் கையில் இருக்கும் சில்க் ஸ்மிதாவுடன் இருப்பது கடவுள் ஆசிர்வாதம் கிடைத்தது போல் உணர்ந்ததாக ஒரு பேட்டியில் வேலு பிரபாகரன் கூறியதாக ஜெயா தேவி கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் அந்த நாள் மிகவும் புனிதமான இரவாக நினைத்த அவர் அடுத்த நாள் என்னை பார்க்க வந்தார் அப்பொழுது கூச்சமாக இருந்ததாகவும் ஜெயா தேவி கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் அது தன்னை மிகப்பெரிய அளவில் பாதித்ததாகவும் மனவேதனைகளுடன் அந்த சம்பவத்தை கண்ணீருடன் கூறியுள்ளார் ஜெயா தேவி.

2009 ஆம் ஆண்டு தான் இயக்கி நடித்த காதல் கதை படத்தில் நடித்த நடிகை சஷிரிலா தாஸை வேலு பிரபாகரன் 60 வயதில் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.