அஜித் அதிகமாக பேசிய கெட்ட வார்த்தை.! பிரபல நடிகர் ஓபன் டாக்.!

ajith news
ajith news

சினிமாவில் உள்ள பல நடிகர்கள் வாரிசு நடிகராக தான் சினிமாவில் இறங்கி பின்பு தான் வெற்றி பெற்றார்கள் ஆனால் சினிமா பின்புலம் இல்லாமல் தன்னுடைய உழைப்பாலும் திறமையாலும் தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக உச்சத்தில் இருப்பவர் தல அஜித்.

தல அஜித் தமிழ் சினிமாவில் பல தோல்வி திரைப்படங்களை கொடுத்துள்ளார் ஆனால் தோல்வி அடைந்து விட்டோமே என தன்னைத் தாழ்த்திக் கொள்ளாமல் தன்னால் முடியும் என மீண்டும் மீண்டும் எழுந்து வெற்றிக் கனியை ரசித்தவர்.

தல அஜித்திற்கு முதன்முதலில் ஹிட்டடித்த திரைப்படம் என்றால் அது ஆசை தான் இந்த திரைப்படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியவர் மாரிமுத்து, இவர் தற்போது ஜீவா, பரியேறும் பெருமாள் என பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் முதன்முதலாக திரையுலகில் தான் கடந்து வந்த பாதை பற்றி பேசியுள்ளார், அதுமட்டுமில்லாமல் அஜித் பற்றி முதன் முறையாக பேசியுள்ளார் அதில் அவர் கூறியதாவது. தல அஜித் அனைவரிடமும் அன்பாக பழக கூடியவர்.

தல அஜித் அனைவரையும் மதிக்க கூடியவர் அஜித்திற்கு மிகவும் பிடித்து விட்டால் அவர் செல்லமாக ஒரு கெட்ட வார்த்தையை பயன்படுத்தி செல்லமாக அழைப்பார் எனக் கூறியுள்ளார்.

அவர் கூறியது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது அது என்ன கெட்ட வார்த்தை என ரசிகர்கள் ஆவலுடன் கேட்டு வருகிறார்கள்.