நீங்க இல்லாமல் துபாயே காத்து வாங்குது..! வடிவேலுக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த பிரபல இயக்குனர்..!

vadivelu-1

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குனராக வலம் வருபவர்களில் இயக்குனர் சேரனும் ஒருவர் இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் வடிவேலின் பிறந்த நாளை முன்னிட்டு வெற்றிக்கொடி கட்டு பட காமெடி அடிப்படையாக வைத்து வாழ்த்து தெரிவித்து உள்ளார் இவ்வாறு அவர் தெரிவித்த வாழ்தானது சமூக வலைதளப் பக்கத்தில் இன்று வைரலாக பரவி வருகிறது.

நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி திரைப்படம் நடித்தபோது இயக்குனர் ஷங்கருக்கும் இவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக  தயாரிப்பாளர் சங்கம் ஒன்றுசேர்ந்து வடிவேலுவை எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்க முடியாமல் செய்து விட்டார்கள்.

இவர் திரையில் தென்படாமல் இருந்தாலும் சரி இவருடைய காமெடிகள் இன்றும் தொலைக்காட்சி,  யூடியூப், திரைப்படம் போன்ற பலவற்றிலும் ஒலிபரப்பாகி கொண்டுதானிருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் எந்த ஒரு பிரச்சனை ஏற்பட்டாலும் சரி அதில் வடிவேலுவின் காமெடியை மையமாக வைத்துதான் மீம்ஸ் கிரியேட் செய்வார்கள்.

அந்த வகையில் தற்போது தயாரிப்பாளர் சங்கம் வடிவேலு மீது இருந்த குற்றச்சாட்டை நீக்கிய பிறகு நடிகர் வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

vadivelu-2
vadivelu-2

இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் பிறந்தநாளை முன்னிட்டு சினிமாவில் வலம் வரும் பல்வேறு பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இயக்குனர் சேரன் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் வடிவேலு ஐயா .

என்று கூறி நம்பர் 6 விவேகானந்தர் தெரு துபாய் குறுக்கு சந்தில் இருந்து பேசுகிறேன் நீங்கள் மறுபடியும் துபாய்க்கு வந்தது எனக்கு மிகவும் சந்தோஷம் வாங்கய்யா பின்னலாம். நீங்க இல்லாம துபாய் ரோடு காத்து வாங்கிட்டு இருக்கு என கூறியது மட்டுமல்லாமல் நீங்கதான் காமெடியில் கிங் எனவும் பதிவிட்டுள்ளார்..

vadivelu-3