“ஜெய் பீம்” படத்திற்காக நடிகர் சூர்யாவை வாழ்த்திய பிரபல இயகுனர் – என்ன சொன்னார் தெரியுமா.? கொண்டாடும் ரசிகர்கள்.

JAI-BHIM

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை சமீபகாலமாக தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கொண்டு வருபவர் நடிகர் சூர்யா தற்போது இவரது நடிப்பில் பல்வேறு திரைப்படங்கள் வெளிவர இருக்கின்றன முதலாவதாக ஜெய்பீம் என்ற திரைப்படம் வெளிவர இருக்கிறது.

அதுவும் நாளை அமேசான் OTT தளத்தில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து தற்போது வரையிலும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது ஏனென்றால் இருளர் இன மக்கள் உண்மையாகவே தனது வாழ்வாதாரத்தை இழந்து இருக்கின்றனர்.

அவர்களைப் பற்றிய ஒரு படமாகத்தான் இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளது ஜெய்பீம் படத்தில் நடிகர் சூர்யா முதல்முறையாக வக்கீல் கெட்டப்பில் நடித்து அசத்தி உள்ளார் இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பிரகாஷ் ராஜ், ரமேஷ், ரஜிஷா விஜயன், லிஜோ மோல் போன்ற பலர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.  படம் தமிழைத் தாண்டி 240 நாடுகளில் படம் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தை அண்மையில் முக ஸ்டாலின் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் பார்த்து அசந்து போயுள்ளனர் அந்த அளவிற்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது ஏன் சமீபத்தில் கூட சூர்யா  இந்த படத்தை மற்ற படம் போல் இருக்காது ரசிகர்கள் உடனே மறந்து விட முடியாது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடிய படம் எனது கேரியரில் முக்கியமான படம் என சூர்யா கூறினார்.

இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் சூர்யாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார் அதில் அவர் கூறியது மிக மிக அவசியமான நேரத்தில் தயங்காமல் முன்னெடுத்து நகரும் சூர்யா அவர்களுக்கு  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். மேலும் ஜெய்பீம் வெல்லட்டும் என அவர் கூறி பட குழுவினரை வாழ்த்தியுள்ளார்.

MAARI SLVARAJ
MAARI SLVARAJ