பைக்கில் படுமோசமான வசனம்.. திரவுபதி இயக்குனரால் அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் அப்படி என்ன எழுதி இருந்தார்கள் தெரியுமா.?

bike-slogan

தற்பொழுது இருக்கும் இளைய தலைமுறையினர் ஒரு பைக் இருந்தால் போதும் என நினைக்கிறார்கள், அதை தாண்டி எதையும் சிந்திக்க மாட்டார்கள், பைக்கில் சுற்றுவது ஏதோ உலகை சுற்றுவதுபோல் எண்ணுகிறார்கள்,  பல இளைஞர்களுக்கு பைக் மிகவும் பிடித்த ஒன்று.

அதேபோல் ஒரு பைக் வாங்கி விட்டால் அவர்கள் செய்யும் அலப்பறைக்கு அளவே கிடையாது, அந்த பைக் என்ன பைக் என்பதை கண்டுபிடிக்கவே முடியாத அளவிற்கு ஸ்டிக்கர்களை ஒட்டி கொள்வார்கள், அதுமட்டுமில்லாமல் ரேஸ் என்ற பெயரில் சரசரவென செல்வார்கள்.

மேலும் பைக்கில் கண்டகண்ட வசனத்தை எழுதி, பார்ப்பவர்களை எரிச்சல் படுவார்கள், அந்த வகையில் பாண்டிச்சேரியை சேர்ந்த ஒருவர் தன்னுடைய பைக்கின் பின் மக்கார்டில் ஆபாசமான வசனம் ஒன்றை எழுதி சுற்றித்திரிந்து உள்ளார்கள், இதனை திரவுபதி படத்தின் இயக்குனர் கவனத்திற்கு கொண்டு சென்றார்கள் இணையதள வாசிகள்.

புகைப்படங்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்ய சம்பந்தப்பட்ட அந்த வாலிபரை பிடித்து அடித்தார்கள் போலீஸ் இதுபோன்ற நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.