தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலர் டிக் டாக் மூலம் பிரபலமாகி அதன் பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டனர் அப்படி டிக் டாக் மூலம் பிரபலமானவர் தான் ஜி பி முத்து. அதன் பிறகு youtube இல் ஒரு சேனலை தொடங்கி முழு வீடியோக்களையும் வெளியிட்டு பல ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.
பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு யூடியூபில் காணாமல் இருந்து வந்த ஜி பி முத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் ஜி பி முத்து இந்த நிலையில் தற்போது பிரபல கிரிக்கெட் வீரருடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நடிகை சன்னி லியோன் கூட ஒரு படத்தில் ஜி பி முத்து அவர்கள் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து அடுத்ததாக பிரபல கிரிக்கெட் வீரருடன் கைகோர்த்து உள்ளார் ஜிபி முத்து இந்த தகவல் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. அதாவது பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தற்போது பல படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் டிக்கிலோனா, பிரண்ட்ஷிப் ஆகிய படங்களில் நடித்த ஹர்பஜன் சிங் அடுத்ததாக இன்னொரு திரைப்படத்தில் நடிக்கிறார் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பிரண்ட்ஷிப் படத்தை இயக்கிய ஜான் தான் ஹர்பஜன் சிங்கை வைத்து மற்றொரு திரைப்படத்தையும் இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை 70 சதவீதம் முடிந்துள்ள நிலையில் இந்த திரைப்படத்தில் ஜி பி முத்துவை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டம் தீட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.