தமிழ் நடிகரை வாழ்த்தி பேசிய பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின்.! யாரை தெரியுமா.?

ashwin
ashwin

தமிழக வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் சமீபகாலமாக இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்டு தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் சிறப்பாக பயணித்து வரும் அஸ்வின் யூடியூப் சேனல்களில் அவ்வப்போது கிரிக்கெட் மற்றும் சினிமா பற்றி பேசி வருகிறார்.

அதிலும் குறிப்பாக  நெருங்கிய நண்பரும் நடிகருமான விஷ்ணு விஷால் பற்றி அவ்வப்போது பேசுவது வழக்கம் அந்த வகையில் இப்பொழுதும் அவரது படத்திற்கு வாழ்த்துக்களை சொல்லி அசத்தி உள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள எப்ஐஆர் படம் வருகின்ற பிப்ரவரி 11 ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து மிரட்டியது இந்த படம் சிறப்பாக இருக்கும் என பலரின் கருத்தாக இருக்கிறது. இந்த நிலையில் இந்திய வீரர் அஸ்வின்   கூறி உள்ளது.  எஃப்ஐஆர் படத்தின் டிரைலரை பார்த்தேன் படத்தை காண காத்திருக்க முடியவில்லை நண்பா வழக்கம் போல..

உங்களுடைய கதையை தேர்வு என்னை வியக்க வைக்கிறது  தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். அதற்கு நடிகர் விஷ்ணு விஷாலும் மிக்க நன்றி நண்பா உங்களது பந்துவீச்சு மாறுபாடுகள் மற்றும் சாதனைகளை விட இது ஒன்றும் நிச்சயம் அற்புதமானது இல்லை என்று தெரிவித்தார்.

இவர் விஷ்ணுவிஷால் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பாக கிரிக்கெட்டில் அதிகமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டது கிரிக்கெட்டில் என்பது குறிப்பிடத்தக்கது அதில் வெற்றி காண முடியவில்லை என்றாலும் ஒரு ஹீரோவாக தற்பொழுது மக்களுக்கு சிறப்பான படங்களை கொடுத்து அசத்தி வருகிறார்.