பிக் பாஸ் பிரபலம் தாமரைச்செல்விக்கு வீடு கட்டித்தரும் பிரபல இசையமைப்பாளர்.! யாருடா அது.?

விஜய் டிவியில் சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் பல புதுமுக கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். அப்படி கடைசியாக ஒளிபரப்பாகி நிறைவுபெற்ற பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தாமரைச்செல்வி. இவர் ஒரு மேடை நாடக கலைஞர் ஆவார்.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் தமிழ் மக்கள் பலருக்கும் தாமரைச்செல்வி அறிமுகமானார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒரு கட்டத்தில் தாமரைச்செல்வி தனது வாழ்க்கையில் நடந்த  முக்கிய நிகழ்வுகள் குறித்து கூறியுள்ளார் அதில் அவர் இளம் வயதிலேயே வீட்டின் வறுமை காரணமாக நாடகத்துறையில் சேர்ந்துள்ளார்.

பின்பு ஒரு கட்டத்தில் தாமரைச்செல்வி திருமணம் செய்து கொண்டு ஒரு மகன் உள்ள நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக அவர்கள் பிரிந்து உள்ளனர் சில காலங்களுக்கு பிறகு பார்த்தசாரதி என்னும் நபரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தாமரைச்செல்வி மிக ஏழ்மையான வீட்டில் பிறந்திருந்தாலும் கடின உழைப்பின் காரணமாக மாடி வீடு ஒன்றை வாங்கி அதற்கு மாதம் தோறும் பைனான்ஸ் கட்டி வருகின்றனர்.

ஆனால் தாமரைச் செல்வியின் அம்மா, தங்கை, அக்கா ஆகியவர்கள் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர்.அவர்களது வீட்டு செலவு, படிப்பு செலவு போன்றவற்றை தாமரை தான் பார்த்து வருகின்றனர். மேலும் தாமரையின் அம்மா வீட்டிற்கும் சென்று பேட்டி எல்லாம் எடுத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தாமரைச்செல்வி பிக் பாஸ் அல்டிமேட்டிலும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி பைனல்ஸ் வரை சென்றார்.

அதைத்தொடர்ந்து தற்போது பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் அவரது கணவருடன் இணைந்து கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் தொகுப்பாளரும் இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்த் தாமரைச் செல்வியின் குடும்பத்திற்கு வீடு அமைய உள்ளது எனவும் பலரின் உதவியோடு தாமரைக்கு வீடு கட்டித் தருவதாகவும் அவரது யூடியூப் பக்க வீடியோவில்  பேசியுள்ளார்.

jems vasanth
jems vasanth