தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தை ஒரு வழியாக நீங்கள் முடித்து விட்டாலே ஒரு மிகப்பெரிய சாதனைதான் என ரசிகர்களும் புலம்ப ஆரம்பித்துவிட்டனர் ஏனென்றால் இரண்டு வருடங்களாக இந்த படத்தை எடுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் , மோஷன் போஸ்டர் என எதுவுமே வெளியிடாமல் இருந்ததால் ரசிகர்கள் படத்திற்கு அதிக ஆதரவு தந்தாலும் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்தனர்.
ஒரு வழியாக வலிமை படத்தின் அப்டேட்டை ஜூலை மாதத்தை குறிப்பிட்டு படக்குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரும் என சொல்லி இருந்ததால் ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய ஒரு நாளாக கொண்டாட காத்துக் கிடக்கின்றனர் ஆனால் தற்பொழுது வரும் ஏமாற்றத்தை மட்டுமே சந்தித்து வருகின்றனர்.
இப்படியிருக்க தமிழ் திரையுலக ரசிகர்கள் கூட்டம் அஜித் பற்றிய ஏதாவது ஒரு செய்தியை சமூக வலைதள பக்கத்தில் மிகப்பெரிய அளவில் பரப்பி வருகின்றனர். அந்த வகையில் பிரபல நிறுவனம் ஒன்று விளம்பர பேனரில் “வலிமை அப்டேட்” கேட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இந்த பேனரையும் தற்போது தல ரசிகர்கள் கொண்டாடி வருவதோடு சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர் இதொ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.