கமல் நடிக்கும் “விக்ரம்” படத்தின் ஆடியோ உரிமையை மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றிய பிரபல நிறுவனம் – சைலண்டாக வேலையை முடித்த படக்குழு.

vikram-movie
vikram-movie

சினிமா உலகில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் பட வாய்ப்புகள் குவியும் அதற்கு உதாரணம் உலகநாயகன் கமலஹாசன் கூட நாம் சொல்லலாம் சமீபகாலமாக இவர் படங்களில் நடிப்பதையும் தாண்டி அரசியல் பிரவேசம் கண்டார். அதிலும் நல்லதொரு முன்னேற்றத்தை அடைந்து வந்துள்ள உலகநாயகன் கமலஹாசன் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி தற்போது பயணித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் அரசியலை தொடர்ந்து இவர் வியாபாரம் கால் தடம் பதித்து உள்ளார். இது போதாத குறைக்கு சின்னத்திரை பக்கம் வந்து தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார் இப்படி தன்னால் என்ன முடியுமோ அதை எல்லாம் செய்து அசத்தி வருகிறார். இதனால்மக்கள் மத்தியில் இன்னும் ஜொலிக்கிறார் உலகநாயகன் கமலஹாசன்.

இப்போ பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை  சிறப்பாக ஒரு பக்கம் தொகுத்து வழங்கி வந்தாலும் மறுபக்கம் சினிமாவிலும் நடித்து அசத்தி வருகிறார் அந்த வகையில் சமீபகாலமாக ஹிட் படங்களை கொடுத்து வந்த லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் “விக்ரம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் போன்ற பலர் முக்கிய நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படத்தை மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அவ்வப்பொழுது புகைப்படங்களில் கசிந்த வண்ணமே இருக்கின்றன இது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைப்பதற்கு படக்குழு செய்யும் வேலையாக தெரிகிறது.

இப்படி இருக்கின்ற  நிலையில் கமலின் பிறந்த நாளன்று glimpse அல்லது ஏதேனும் ஒரு வீடியோ வெளிவந்தாலும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் “விக்ரம்” படத்தின் ஆடியோ உரிமையை உலகின் முன்னணி நிறுவனமான சோனி மியூசிக் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது அதுவும் ஆடியோ மட்டுமே மிகப்பெரிய ஒரு தொகைக்கு விற்கப்பட்டுள்ளது கூறப்படுகிறது.