தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிம்பு நடிப்பில் திரைப்படங்களை சமீப காலங்களாக தந்து வரும் நிலையில் தற்போது அவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் பத்து தல கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிம்புவின் பத்து தல படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த படம் வருகின்ற 31ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக பல திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தில் சிம்பு உள்ளிட்ட படக் குழுவினர்கள் கலந்துக் கொண்டனர். மேலும் அந்த படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பினை பெற்ற நிலையில் கண்டிப்பாக இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சற்று முன்பு இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் ராவடி பாடல் வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த பாடலுக்கு ஆர்யாவின் மனைவியும், நடிகையுமான சாயிஷா செம குத்தாட்டம் போட்டுள்ளார் மேலும் தற்போது இதனை அடுத்து பத்து தல படத்தின் மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.
அதாவது திரையரங்குகளில் வெளியிட்டதற்கு பிறகு இந்த படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை அமேசான் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து சாட்டிலைட் உரிமத்தை ஜீ தமிழ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும், மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஜீ தமிழ் தொலைக்காட்சி வரும் ஏப்ரல் 2ம் தேதி ஒளிபரப்ப உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் மேனன், கலையரசன், டி கே அருணாச்சலம், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தினை கிருஷ்ணா இயக்க பருக் பாட்ஷா ஒளிப்பதிவில் பிரவீன் கே எல் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தினை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 32 நிமிடங்கள் எனவும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது