சந்தானத்தை தொடர்ந்து ஹீரோவாக களமிறங்கும் பிரபல காமெடி நடிகர்.! இதெல்லாம் சூர்யாவின் சூரரைப்போற்று கொடுத்த தைரியம்தான்.!

SURYA 7
SURYA 7

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக கொடிகட்டிப் பறந்த  வந்தவர் நடிகர் சூர்யா தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து பல வெற்றித் திரைப்படங்களை தந்து வந்தார். இவரின் சிறந்த நடிப்பு திறமையினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இவ்வாறு மிகவும் நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் இவர் செய்த சிறு சிறு தவறுகலினால் இவரின் மொத்த மார்க்கெட்டையும் இழந்துவிட்டார். இவ்வாறு தொடர்ந்து தோல்வி திரைப்படங்களை தந்து வந்ததால் ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

இதற்கெல்லாம் பதில் சொல்லும் வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக சூரரைப்போற்று திரைப்படம் அமைந்தது இத்திரைப்படத்தை சுதா கொங்காரா இயக்கியிருந்தார்.

தொடர்ந்து தோல்வி திரைப்படங்களை தந்து வந்த சூர்யாவிற்கு இத்திரைப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்தத் திரைப்படம் வெளிவந்த முதல் நாளில் இருந்து தற்பொழுது வரையிலும் சாதனை படைத்து வருவதாக இணையதளத்தில் பேசி வருகிறார்கள்.

இத்திரைப்படத்தில் சூர்யா மட்டுமல்லாமல் ஹீரோயினாக நடித்திருந்த அபர்ணா பாலமுரளிக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இவரை தொடர்ந்து தனது அசத்தலான காமெடியை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் காளி வெங்கட்  நடித்திருந்த கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. இவர் தான் தற்பொழுது ஹீரோவாக நடிக்க ஒரு திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளார்.

அந்தவகையில் அமலாபால் நடிப்பில் வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய  ஆடை திரைப்படத்தை தயாரித்து இருந்த விஜி சுப்ரமணியம் என்பவர் தயாரிக்க உள்ளார். இத்திரைப்படத்தில் ஹீரோயினாக மெட்ராஸ் திரைப்படத்தில் நடித்திருந்த பிரித்திவிகா நடிக்க உள்ளார்.

SURYA 06
SURYA 06

லாக் டவுன் முடிந்தவுடன் இத்திரைப்படத்தின் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என்று கூறப்படுகிறது.