80, 90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் என்ற போற்றப்படும் காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் கவுண்டமணி செந்தில். இவர்கள் இருவரும் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார்கள் என்றாலே அந்த படம் ஹிட் என்றுதான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு தனது காமெடியால் மக்களை மகிழ்ச்சியுடன் வைத்திருந்தார்கள்.
தற்போது உள்ள இளைஞர்களும் கவுண்டமணி செந்தில் காமெடி என்றாலே அதற்கு ஒரு தனி ட்ரோல் செய்து வருகின்றனர் அந்த அளவிற்கு தனது காமெடியை வெளிப்படுத்தி இருப்பார்கள் கவுண்டமணி செந்தில். இவர்களைப் புகழின் உச்சத்திற்கு கொண்டு சேர்த்த திரைப்படம் தான் கரகாட்டக்காரன் இந்த திரைப்படத்தில் வாழைப்பழம் காமெடி இன்று வரையிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும் நடிகர் கவுண்டமணி பல நடிகைகளுடன் தொடர்பில் இருந்ததாக சினிமா பிரபலம் ஒருவர் கூறியிருக்கிறார் அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. நடிகர் கவுண்டமணி ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது துணை நடனம் பாடும் நடிகையாக இருந்தவர்தான் ஷர்மிலி. அவ்ளோ பெரிய கூட்டத்தில் அவரை மட்டும் தேர்ந்தெடுத்து தன்னுடைய படங்களில் நடிக்க வைத்தார் நடிகர் கவுண்டமணி.
நடிகர் கவுண்டமணி கிட்டத்தட்ட தமிழில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் அதிலும் 10 திரைப்படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் கிட்டத்தட்ட 50 படங்களில் ஷர்மிலியை தனது ஜோடியாக நடிக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது ஓரிரு திரைப்படங்களுக்கு மேல் தன்னுடன் ஒரு நடிகை தொடர்ந்து நடிக்கிறார் என்றால் அவருடன் கிசுகிசுவில் சுற்றி வருகிறார்கள். இந்த நிலையில் 50 படத்திற்கு மேல் ஒரே நடிகையுடன் நடித்ததால் பல கிசுகிசுவில் சிக்கனார் நடிகர் கவுண்டமணி. அது மட்டுமல்லாமல் நடிகை ஷர்மிலிக்கு ஒரு வீடு கட்டி கொடுத்திருக்கிறார் என்றும் அவருடன் தொடர்பில் இருக்கிறார் என்றும் கிசுகிசுக்கப்பட்டார். இது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை கவுண்டமணியும் அறிவிக்கவில்லை அந்த நடிகையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.