தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தற்போது வரையிலும் பலரையும் கவர்ந்திருப்பவர் தான் நடிகர் வடிவேலு இவருடைய பாடி லாங்குவேஜ், எதார்த்தமான நடிப்பு போன்றவை ரசிகர்களை ரசிக்க வைத்தது அந்த வகையில் தமிழ் சினிமாவின் காமெடி லெஜண்ட்டாக திகழ்ந்து வருகிறார். இதன் மூலம் பல கோடி ரசிகர்களையும் கவர்ந்திருக்கும் நிலையில் பலரும் வடிவேலுவை பற்றி புகழ்ந்து பேசி இருந்தாலும் கூட தற்பொழுது அவருடன் நடித்த சக நடிகர்கள் வடிவேலுவை பற்றிய ஏராளமான உண்மையான முகத்தை வெளிப்படையாக பேட்டிகளில் கூறி வருகிறார்கள்.
சமீப காலங்களாக இவ்வாறு இவர்களுடைய பேட்டி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் வடிவேலுவுடன் சில காமெடி காட்சிகளில் நடித்து பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் கொட்டாச்சி சமீப பேட்டி ஒன்றில் பங்குபெற்ற இவர் வடிவேலு மிகவும் மோசமானவர் என்றும் சக நடிகர்களுக்கு நடிப்பதற்கான சம்பளத்தை தயாரிப்பாளர்கள் கொடுத்தாலும் அதை வடிவேலு பிடுங்கிக் கொள்வார் இவங்களுக்கு எதுக்கு இவ்வளவு சம்பளம் என்றும் கேட்பார்.
ஆனால் விவேக் அப்படிப்பட்டவர் கிடையாது சக காமெடி நடிகர்களுக்கு அந்நாளுக்கான கூலியை அப்பவே கொடுக்க சொல்வார். விவேக் போல் வடிவேலு ஒரு காலமும் வரமாட்டார் என்று கூறியுள்ளார். இவ்வாறு இவர் கூறிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. காமெடி நடிகர் கொட்டாச்சு மட்டுமல்லாமல் ஏராளமான வடிவேலு உடன் அடித்த சக நடிகர்கள் ஏராளமான தகவல்களை கூறியுள்ளனர்.
வடிவேலு திமிர் பிடித்தவர் எனவும் அவரால்தான் ஏராளமான பட வாய்ப்புகளை தவறவிட்டதாகவும் சினிமாவில் வளர விடாமல் தன்னை தடுத்ததாகவும் பலரும் வடிவேலு பற்றிய உண்மைகளை பகிர்ந்து வருவது ரசிகர்கள் மத்தியில் பெரிதாக ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு வடிவேலுக்கு சமீப காலங்களாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார் இந்த படம் மண்ணை கவ்விய நிலையில் தற்போது உதயநிதி நடிப்பில் உருவாகி இருக்கும் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.