comedy actor vadivelu consider kamalhaasan as his god information viral: உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவரைப்பற்றி பிரபல காமெடி நடிகர் ஒருவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். வைகைப்புயல் வடிவேலு கமலோடு பழகிய பழக்கங்களைப் பற்றி பேட்டி அளித்துள்ளார்.
கமல்ஹாசனுடன் சிங்காரவேல் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது வடிவேலை பார்த்து கமல்ஹாசன் என்னோட ஆபீஸ் போங்க அங்க டி.எம்.எஸ் சாரை பாருங்க என்று கூறி இருக்கிறார்.
சூட்டோடு சூடாக வடிவேலு அங்கே போயி டி எம். எஸ். சாரை பார்த்திருக்கிறார். அப்போது அவர் தேவர் மகன் படத்தில் இவர் நடிப்பதற்காக அட்வான்ஸாக ஐயாயிரம் கொடுத்ததாக வடிவேலு கூறியுள்ளார்.
இதனை அடுத்து வடிவேலு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இவரை தட்டிக் கொடுத்து நீதாண்டா மதுரை ஒரிஜினல் பாசை பேசுறவன் என்று கூறியிருக்கிறார். மேலும் வடிவேலு நான் இப்படி பாராட்டு வாங்குகிறேன் என்றால் அதற்கு எல்லாம் உலகநாயகன் கமல்ஹாசன் தான் காரணம் என்றும் கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் அவர் எனது கண்களுக்கு கடவுளாக காட்சியளித்து வருகிறார் என்று பேட்டியில் கூறியிருக்கிறார் வடிவேலு. இந்த செய்தி இணையதளத்தில் மிகவும் வேகமாக பரவிக் கொண்டே வருகிறது.