250 திரைபடதிக்கு மேல் நடித்த பிரபல காமெடி நடிகர் சிவ நாராயணமூர்த்தி திடீர் மரணம்.! கடும் சோகத்தில் ரசிகர்கள்…

siva-narayanamurthy
siva-narayanamurthy

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக வளம் வந்து கொண்டிருந்த சிவன் நாராயணமூர்த்தி நேற்று இரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருடைய இறப்பிற்கு பல சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தன்னுடைய உடல் அமைப்பாலும், முகபாவனையாலும் தமிழ் திரைப்படங்களில் போலீஸ் கதாபாத்திரம், கிராமத்து பண்ணையார் உள்ளிட்ட பல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். அதிலும் வடிவேலுவுடன் இணைந்த இவருடைய காம்போ ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இயக்குனர் விசுவாள் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்ட சிவன் நாராயணமூர்த்தி பூந்தோட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 67 வயதான இவர் ரஜினி, விஜய், கமல், விஜயகாந்த், அஜித், உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிவ நாராயணமூர்த்தி தனக்கு படப்பிடிப்பு இல்லாத நாட்களில் புதுக்கோட்டை அருகே உள்ள அணைக்கட்டு என்ற தன்னுடைய சொந்த கிராமத்திற்கு சென்று படபிடிப்பு இல்லாத நாட்கள் அங்கேயே செலவிட்டு வருவாறாம். அப்படி தன்னுடைய சொந்த ஊருக்கு சென்ற இவர் நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

250 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள சிவ ராமாயணமூர்த்தி தற்போது மறைந்த சம்பவம் சினிமா துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இவருடைய மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிவநாராயணமூர்த்தி அவர்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளார்.

என்னதான் இவர் மறைந்தாலும் இவருடைய காமெடி காட்சிகள் நம்மை விட்டு நீங்க அளவிருக்கு ரசிகர்களை பல திரைப்படங்களின் மூலம் மகிழ்வித்துள்ளார்.